இந்தியா எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமித்தது இல்லை

இந்தியா எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமித்தது இல்லை, எந்த நாட்டின்மீதும் இந்தியா வலியச்சென்று முதல் தாக்குதல் நடத்தியது கிடையாது.ஆனால், அதே நேரத்தில் 2 உலகப்போர்களில், 1.5 லட்சம் இந்திய வீரர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த 2 உலகப்போர்களில், இந்தியாவுக்கு நேரடித்தொடர்பில்லை என்ற போதிலும், பிறருக்காக (பிற நாடுகளுக்காக) இந்திய வீரர்கள் தங்களது உயிரைத்தியாகம் செய்துள்ளனர்.


2 உலகப்போர்களிலும் மிகப்பெரிய விலையை இந்தியா கொடுத்தபோதிலும், தனது தியாகத்தின் முக்கியத்துவத்தை உலகநாடுகள் உணரும்படி இந்தியா செய்ததில்லை. இதை உணர்த்தவே, எப்போதெல்லாம் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறேனோ, அப்போதெல்லாம் அங்கிருக்கும் இந்தியவீரர்களின் போர் நினைவிடத்தில் நான் அஞ்சலி செலுத்திவருகிறேன்.


வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூகத்தினருக்கு, அந்நாட்டு அரசியலில் தலையிடவேண்டும் என்பதிலோ அல்லது அந்தநாடுகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்பதிலோ நம்பிக்கை கிடையாது. அந்நாடுகளில் பிறசமூக மக்களோடு ஒன்றோடு ஒன்றாக இணைந்துவாழ்ந்து வருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தண்ணீர் போன்றவர்கள். தேவைக்கேற்ப தங்களது நிறத்தையும், தோற்றத்தையும் அவர்கள் மாற்றிக்கொள்வார்கள்.


இந்திய தூதரகங்களை காட்டிலும் அதிகசெல்வாக்குடன் இந்திய சமூகமக்கள் வாழும் நாடுகள் உள்ளன. அவர்கள், இந்தியாவில் இருந்துவரும் மக்கள் மீது இருக்கும் இனம் புரியாத அச்சத்தைப் போக்குவதற்கு உதவிசெய்ய வேண்டும்.


இந்தியாவில் இருந்து திறமை யானவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து (ப்ரெய்ன் டிரெய்ன்) முன்பு பல முறை பேசி விட்டேன். வெளிநாட்டுவாழ் இந்திய வம்சாவளியினரின் சக்தியை நாம் முறைப்படுத்தும் பட்சத்தில், ப்ரெய்ன் டிரெய்ன் என்பதை ப்ரெய்ன் கெய்னாக மாற்றமுடியும்.


தண்ணீரின் சக்தியை அணைகளில் ஒன்றிணைக்கும் போது, மின்சாரம் தயாராகிறது. அதேபோல், இந்தியாவை ஒளிரச்செய்வதற்கு, 2.45 கோடி வெளிநாட்டுவாழ் இந்திய வம்சாவளி மக்களின் சக்தியை பயன் படுத்துவதற்கு ஆதாரம் தேவைப்படுகிறது.


நேபாள நாட்டில் பூகம்பம் தாக்கிய போது அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்தது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டிருக்கும் யேமனில் சிக்கியிருந்த இந்தியர்கள், பிற வெளிநாட்ட வர்களை மீட்கும் பணியிலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சிறப்பாக ஈடுபட்டது. மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்யும் நாடுகளில் இந்தியாவும் தன்னைத்தானே தற்போது சேர்த்துக் கொண்டுள்ளது.

அதில் முக்கிய பங்களிப்பாளராகவும் திகழ்கிறது. இதனால் பிரச்னைக்குரிய இடத்தில் சிக்கித்தவிக்கும் தங்கள் நாட்டுமக்களை மீட்பதற்கு இந்தியாவின் உதவியை பிறநாடுகளும் தற்போது கேட்கத்தொடங்கி விட்டன.

தில்லியில் பிரவஸி பாரதீய கேந்திரா எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மையத்துக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்துப் பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...