உத்தர பிரதேசத்தில் பாஜ வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் கருத்துக் கணிப்பு

உத்தரப் பிரதேச சட்ட சபைக்கு 7 கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இந்நிலையில் எந்தகட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று ‘இந்தியாடுடே’ இதழ் அக்டோபர் முதல் நவம்பர் மாதம்வரை கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் உத்தர பிரதேசத்தில் பாஜ வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பாஜ.வுக்கு உத்தரப் பிரதேசத்தில் 31 சதவீத வாக்குவங்கி உள்ளது.

அது கடந்த மாதம் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரூபாய் நோட்டுகள்செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு உத்தரப் பிரதேசத்தில் பாஜ.வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில் ஆய்வுசெய்ததில்  206 முதல் 216 இடங்களில் பாஜ வெற்றிபெறும் என்று கணிக்கப் பட்டுள்ளது. எனவே பாஜ தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் மெஜாரிட்டி பலத்துடன் வெற்றிபெறும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஆளும் கட்சியாக உள்ள முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி உள்கட்சி பூசல்காரணமாக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் என்றும், அந்தகட்சிக்கு 92 முதல் 97 இடங்கள்வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிக்கு 79 முதல் 85 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

 காங்கிரசுக்கு 5 முதல் 9 இடங்கள்வரை கிடைக்கலாம் என்று கருத்துக்கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மற்ற சிறியகட்சிகள் 7 முதல் 11 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கு அகிலேஷ் யாதவிற்கு. 33 சதவீதம் பேரும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வராக 20 சதவீதம் ஆதரவும், கோரக்பூர் எம்பி யோகி   ஆதித்திய நாத் முதல்வராக 18 சதவீதம் ஆதரவும் கிடைத்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...