சசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது

சொத்துகுவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம், இன்று உறுதிசெய்தது. பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமார சாமி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன்மூலம், சசிகலா உள்ளிட்ட மூன்றுபேரும் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்துசேர்த்ததாக, 1996ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தவழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27 ல் தீர்ப்பு அளித்தார். ஜெ.,க்கு 4 ஆண்டுசிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம்; மற்ற மூன்றுபேருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. உடனே நான்குபேரும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 21 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் ஜெ., உள்ளிட்ட நான்குபேர் மூலம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுவித்து, 2015 மே, 11ம் தேதி தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசுசார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பு அளிப்பதை, 2016 ஜூன், 7 ம் தேதி ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று, இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.

ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்மீதான சொத்துகுவிப்பு மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகியோர் இன்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:வழக்கின் உண்மை தன்மையை நன்குவிசாரித்த பிறகு, நான்கு பேருக்கும் எதிராக கர்நாடக சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீண்டும் அமலுக்கு வருகிறது. எனவே, நான்கு பேரும் சிறப்புநீதிமன்றம் முன் ஆஜராகி, பாக்கி உள்ள சிறை தண்டனை காலத்தை அனுபவிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.