சவுராஸ்டிரா விவசாயிகளை வைர வியாபாரிகளாக மாற்றிய மோடி-

ஹர்திக்பட்டேல் என்கிற சிறுவன் துவங்கிவைத்த இட ஒதுக்கீடு போராட்டம் பிஜேபியை நிலைகுலைய வைத்தது என்னவோ நிஜம்.ஆனால் மோடியின் சாமர்த் தியமான நடவடிக்கையால்  ஆனந்தி பென் வீட் டுக்குஅனுப்பட்டு விஜய் ரூபாணி முதல்வராக வந்தவு டனே குஜராத் மீண்டும் பிஜேபியின் கைக்கு வந்துவிட் டது என்றே சொல்லலாம்

 

இதை உறுதி படுத்துவது போல இருந்தது நேற்று சூரத்தில் மோடி நடத்திய 12 கிலோமீட்டர் அணி வகுப்பு.20,௦௦௦ க்கும் அதிகமான பைக்குகளில் திரண்டு வந்திருந் த படேல் இளைஞர்கள் மோடி வாகனத்தை தொடர்ந்து நடத்திய பேரணியால் சூரத் நகரமே திணறி விட்டது என்றே  சொல்லலாம்.

 

பிஜேபியின் கோட்டையான சூரத்தில் படேல்கள் தான் அதிகமாக வசிக்கிறார்கள்.இந்த படேல்கள் இணைந்து சமஸ்த் படிகார் ஆரோக்யா டிரஸ்ட் ஒன்றை வைத்தி ரு க் கிறார்கள்.இந்த டிரஸ்டு மூலம் 500 கோடி ரூபாய் செலவில் கரண  ஹாஸ்பிட்டல் என்கிற பெயரில் ஒரு ஹாஸ்பிட்டல் கட்டியுள்ளார்கள்.இதை  மோடி இன்று திறந்துள்ளார்.இதற்கு 2013 ல் அடிக்கல் நாட்டி ய வரும் நம்ம மோடிதான்.

 

550 பெட் கொண்ட இந்த ஹாஸ்பிடலின் நோக்கம் சவுராஸ்டிரா பகுதியில் இருந்து பிழைக்க  சூரத்வந்து வைரத்திற்கு பட்டை தீட்டும் தொழில் செய்து கொண்டிருக்கும் படேல்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று வைர தொழிலில் கொடிகட்டி பறக்கும் கரண் டைமண்ட் எக்ஸ்போர்ட் நிறுவனம் பெரிய அளவில் பணம் அளிக்க அப்புறம் சிறிய வைர வியாபாரி களான படேல்கள் தங்களால் இயன்றதை அளிக்க இன்று பிரமாண்டமாய் 13 ப்ளோர்களோடு படேல்களின் உழைப்பை பறைசாற்றி நிற்கிறது இந்த ஹாஸ்பிட்டல்.ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸ் எது தெரியுமா?

 

ஹெலிகாப்டர்..மூலம் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கபடுகிறது.இதுக்கெல்லாம் முக்கிய காரணம் படேல்களின் உழைப்பு தான்.இது விவசாயிகள் வைர வியாபாரிகளாக மாறிய வெற்றிக்கதை.இதையும் கொஞ்சம் கேளுங்களேன்.

 

சூரத் என்றாலே நினைவிற்கு வருவது ஒன்று துணி

இன்னொன்று வைரம்.இதில் இந்த வைரத்தை பாலி ஸ் செய்யும் தொழில் எப்படி  சூரத்தில் வளர்ந்தது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். இன்று வருஷத்து க்கு 50,௦௦௦ கோடி ரூபாய்க்கு மேல்  சூரத் தில் மட்டும்  டைமண்ட் பாலிஸ் செய்யும் தொழில் மூலம் பிசினஸ் நடக்கிறது இதற்கு யார் காரணம் தெரியுமா?

 

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதியில் பருவ மழையை எதிர்பார்த்தே விவசாயம் இருந்தது.. இத னால் விவசாயிகள் ஆண்டில் 6 மாதம் மட்டுமே விவசாயத்தி ல் ஈடுபட முடியும். அதிலும் போதிய வருமானம் இருக்காது. இதனால் பலர் விவசாய வேலை இல்லாத சமயங்களில் வேறு வேலைக்கு போய் பொழப்பை பார்ப்பதும் மழை பெய்ய ஆரம்பித் தவுடன்  மீண்டும் விவசாயத்திற்கு திரும்பு வதும் இவர்களின் பழக்கம்.

 

பார்த்தீர்களா ..நம்ம விவசாயிகளும் இருக்கிறார்களே எப்படா அரசாங்கம் நமக்கு கடனை தள்ளுபடி செய்யும் நோகாமல் நொங்கு திங்கலாம்  என்று காத்து இருக் கி றார்கள். இப்படி தான் சவுராஸ்டிரா பகுதி விவசாயிகள் பலர் சூரத்தில் சேட்டுகள் வைத்திருந்த வைரத்தை பாலிஸ் செய்யும் பட்டறைகளில்  விவசாயம் இல்லாத காலங் களில்வேலைக்கு சேர்ந்து தொழில் பழக ஆரம்பித்தார்கள்.

 

விவசாய வேலை இல்லாத சமயங்களில் மட்டும் சூரத் வரும் இவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் வைரத்தை பட்டை தீட்டும்தொழிலை  முழுக்க கற்று க் கொண்டு பின்னர் தாங்களே சொந்தமாக சிறிய பட்ட றையை ஆரம்பித்து சூரத்திலேயே தங்கிவிடுவார்கள்

 

சூரத் நகரில் வைரம் பட்டை தீட்டும் தொழிலும் இப்படித் தான் வளர்ந்தது. இன்றும் சவுராஷ்ட்ரா பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேலையில்லாத ஆறு மாதங்கள் சூரத் நகருக்கு வந்து வைரம் பட்டைத் தீட்டும் பட்டறைகளில் வேலைக்கு சேருவதை வழக்க மாக கொண்டுள்ளனர். 

 

காலையிலிருந்து மாலை வரை பட்டறைகளில் வேலை செய்யும் இவர்கள், வேலை முடிந்தவுடன் ரோட்டோரங்களில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டுவிட்டு பிளாட்பாரங்களிலேயே தூங்குகின்ற னர்.  இரண்டு, மூன்று ஆண்டுகளில் தொழிலை கற்றுக் கொண்டுவிடுகின்றனர். 

பின்னர் தாங்களே சொந்தமாக சிறிய பட்டறையை ஆரம்பித்து சூரத்திலேயே தங்கிவிடுகின்றனர். இதற்கு தேவையான மூதலீட்டை அவர்களது கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அளிக்கின்றனர். தொழிலில் லாபம் கிடைத்ததும் அவற்றை திருப்பி செலுத்தும் இந்த தொழில் முனைவோர், தங்களது கிராமங்களுக்கு தேவை யான ரோடு போடுதல், பள்ளிக்கூடம் கட்டி கொடுத்தல், கோயில்களை சீரமைத்தல் போன்ற பணிகளையும் செய்கின்றனர். 

 

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த நடை முறை இன்றும் தொடருகின்றது. இதனால் நாட்டி லேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் புதிய தொழில் முனைவோர் வைரம் பட்டை தீட்டும் தொழிலை துவங்குகின்றனர். இவர் களில் பெரும்பாலானவர்கள் தொழிலை கற்கும் வரை பிளாட்பாரவாசிகளாக  தான் இருக்கிறார்கள். 

 

இப்படி தான் ஏழை சவுராஸ்டிரா விவசாயிகளான படேல்கள் சூரத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்து இன்று வைர வியாபாரிகளாக ஜொலித்துக்கொண்டு இருக்கி றார்கள்.உலகில் வெட்டி எடுக்கப்படும் வைரங்களில் 80% சூரத்தில் தான்  பட்டை தீட்டப்பட்டு கிறது.10 லட்சம் பேர் இந்த தொழிலில் இங்கு ஈடுபட்டுள்ளனர்.

 

இதில் பாதிக்கும் மேற்பட்ட வைரவியாபாரிகளின் பிசினஸ் முதலீடு எவ்வளவு தெரியுமா?ஜஸ்ட் 20 ஆயிரம் தான்.ஆனால் ஒரு சிறிய வைர வியாபாரி யின் வருமானம் எவ்வளவு தெரியுமா?5 லட்சம்.

 

உலகத்தில் உள்ள நம்பர் 1 வைர மார்க்கெட் உள்ள பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வர்ப் நகரத்தில் நடக்கும் ஆன் லைன் பிசினஸ் களில் கல்லா கட்டுவது நம்ம  சூரத் பிளாட்பார்ம் வைர வியாபாரிகள் தான்.என்ன ஒரு வருத்தம் இவர்களுக்கு என்றால் படிப்பறிவு இல்லாததால் வெளிநாட்டவர்களுடன் பிசினஸ் டீல் செய்ய நிறைய ஆங்கிலம் தெரிந்த பசங்களை வேலை க்கு வைத்து இருக்கிறார்கள்.

 

பார்த்தீர்களா இயற்கை பொய்ப்பது உலகளவில் உள்ள

விவசாயிகளை பாதித்துக்கொண்டு தான் இருக்கிறது. அதற்காக அவர்கள் யாரும் அரசாங்கத்துடன் போராடி க்கொண்டு இருக்க வில்லை.மாறாக கிடைக்கும் வேலை யை செய்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கி றார்கள்.ஆனால் குஜராத் சவுராஸ்டிரா படேல்கள் மாதிரி  விவசாயிகள் யாரும் வைர வியாபாரிகளாக வாழ்வில் உயர்ந்து இருப்பதை கேள்விப்பட்டதில்லை

 

இந்த ஏழை விவசாயிகளை வைர வியாபாரிக ளாக மாற்றிய பெருமை பிஜேபி ஆட்சியையே சேரும்.

ஏனென்றால் விவசாயம் இல்லாத பொழுது மாற்று

தொழில் செய்யுங்கள் என்பதே குஜராத் பிஜேபி அரசி ன் தாரக மந்திரம்.படேல்கள் கேட்டார்கள்.ஆனால் நம்ம மக்கள் கேட்பார்களா…

 

உடனே விவசாயத்தை அழிக்க பாக்குறார் மோடின்னு வரிசை கட்டி சண்டைக்கு வராதிங்க

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...