குடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிப்பு

பா.ஜ.கவின் குடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆட்சிமன்றகுழு கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் மாலையில் நடைபெற்றது. இதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல்செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 18 எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டணி வேட்பாளாராக கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக வெங்கய்யநாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். 

1949ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்த வெங்கய்யாநாயுடு தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார். அப்போது இவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இருந்தார். இவரதுபேச்சாற்றல் காரணமாக விரைவிலேயே பெரும்புகழை பெற்றார். 1972ல் நடைபெற்ற ஜெய் ஆந்திரா இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார்.

1978 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உதயகிரி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப் பட்டார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வெங்கையாநாயுடு ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்தார். மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். 1998, 2004 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மாநிலங்கள் அவை உறுப்பினராக பதவிவகித்தார். 

2002ல் பாஜகவின் தேசிய தலைவராக இருந்தபோது தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்த்தார். 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவால் ஆட்சியைபிடிக்க முடியவில்லை என்றபோதும், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது நகர்ப்புற மேம்பாட்டுதுறை அமைச்சராக உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...