நாட்டின் 14-வது குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ராம்நாத் கோவிந்த் தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
நாடுமுழுதும் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு என் நன்றிகள். நான் இன்று உணர்ச்சிவசப் பட்டவனாக இருக்கிறேன். வாழ்வுக்காக போராடும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வேன்.
குடியரசுத் தலைவராகவேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை. கடமையை நேர்மையாக ஆற்றுவோருக்கு எனது வெற்றியேசெய்தி இவ்வாறு கூறினார்.
அமித் ஷா கூறும்போது, “குடியரசுத் தலைவராக மிகப்பெரிய வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்ஜிக்கு வாழ்த்துக்கள். இவரது வெற்றி உண்மையில் வரலாற்றுப் பூர்வமானது. இவரது வெற்றி, ஏழை, நலிவுற்றவர்கள், விளிம்புநிலை மக்கள் ஆகியோரது கனவுகளுக்கும் ஆசைகளுக்குமான வெற்றி.
நாட்டின் தனிச்சிறப்பான குடியரசுத் தலைவராக ராம்நாத்கோவிந்த்ஜி திகழ்வார்” என்று தெரிவித்துள்ளார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.