இதுதான் இந்தியாவின் சக்தி

1200 வருட அடிமைப்புத்தி என்பதற்கு சரியான உதாரணம் இன்றைக்கு சீனா-பூடான் எல்லை பிரச்சினையிலே நாட்டின் மீது பற்று உள்ளவர்களே இந்தியாவின் சக்தி என்ன என்பதை உணராமல் இருப்பதுதான்.

இந்துக்கள் அடிமையாக இருந்து அடிவாங்கியே பழகியிருப்பதால் இந்தியாவின் சக்திவாய்ந்த தலைமை என்ன செய்யமுடியும் என்பதை நம்மவர்களே நம்பமுடியாமல் இருப்பதை வேறு எப்படி சொல்வது?

சீனா பிரச்சினையிலே ராணுவமோ, பொருளாதாரம் மட்டும் உதவவில்லை. வலிமை மிக்க ஒப்பற்ற தலைவர் அவரின் பின்னால் நாடே திரளும் என்பதை உலகின் நாடுகள் உணர்ந்ததுதான் முதல் ஆரம்பம்.

இந்தியா தன்னை பாதுகாப்பை உறுதி செய்யும் நாடாக பூடானில் இருந்து வியட்நாம் வரைக்கும் முன் நிறுத்திய போது பூடானியர்களே உள்ளுக்குள்ளே சிரித்திருப்பார்கள். ஆனால் இன்று சொன்னவண்ணம் செய்த பெருமான் என சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்.

இந்தப்பக்கம் ஆப்கான்கிஸ்தான், ஈரான் வரை பாதுகாப்பை உறுதிசெய்யும் நாடாக இந்தியா இருக்கமுடியாது என பக்கிகள் புலம்புதுகள்.உள்ளூரிலே தீவிரவாதிகளை வேட்டையாடிய தாகட்டும் ஜிஎஸ்டி போன்ற இடியாப்ப சிக்கல்களை தேய்த்து சப்பாத்தி ஆக்கியதாகட்டும் மோடி மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசும் தலைமையும் மிக திறமையாக செயல்பட்டது.

ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள்வரும் என சொன்னபோது ஆங்கிலேயர்களோ நேரிலேயே கிண்டல் அடித்தார்கள். மேற்கத்திய ஊடகங்களோ இந்தியா எப்படிவளரும் பார்த்துவிடுகிறோம் என மார்தட்டின. திறந்த வெளி கழிப்பிடம் இந்தியா என கிண்டல் அடித்தன. இந்தியாவிலே மின்சாரம் இல்லை, சாலை வசதிகள் இல்லை என கிண்டல் செய்து வாரம் இரண்டுமூன்று கட்டுரைகளை மேற்கத்திய நாடுகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன.

இன்றைக்கோ அந்நிய நிதி முதலீடு வந்துகுவிகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கும் கண்டு பிடிப்பிக்குமான நிலையங்களை ஆரம்பிக்கின்றன. ராணுவ தளவாடங்களை இங்கே தயாரிக்க வரிசைகட்டி நிற்கின்றன.

இதெல்லாம் வலிமையான தலைமை இல்லாமல் சாத்தியமா?

டோக்லாம் பிரச்சினையிலே சீனாவின் எல்லைக்குள்ளே பூடானுக்கு ஆதரவாக இந்தியா நுழைந்தது என்ற ஒன்றையே புரிந்து கொள்ள முடியவில்லை. நடுவிலே இருந்த பிரச்சினைக்கு உரியபகுதியை தாண்டி இந்தியா உள்ளே நுழைந்திருக்கிறது.

சீனா தன்னுடைய மூன்றுபோர்கள் தந்திரமான மீடியா போர், உளவியல் போர், சட்டப்படியான போர் என எல்லாத்தையும் முயன்றது. இந்தியாவோ கன்டுக்கவே இல்லை.

இந்திய சந்தையை இழக்கவேண்டி வரும். அப்போது நட்டம் சீனாவுக்குத்தான் இந்தியா வேண்டியதை தயாரித்துக் கொள்ளும் என்ற நிலையை காட்டியதுடன் வேறுவழியின்றி சீனா பின்வாங்கியது. வழி அமைக்க வைத்திருந்த வண்டிகள், இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்களை சீனா எடுத்துக்கொண்டு போய்விட்டது.

இன்றைக்கு சீன பத்திரிக்கை, இந்தியாவிலே தரமான மருத்துவ வசதிகிடைக்கிறது எனவே சீனர்கள் இந்தியாவுக்கு போகிறார்கள் என மடை மாற்றியுள்ளது.இந்தபக்கம் அமெரிக்கா கச்சா எண்ணையை அதிகளவு உற்பத்திசெய்து அரபு நாடுகளை திவால் ஆக்குவதிலே இருந்து அந்தப் பக்கம் சீனாவின் தயாரிப்பு உற்பத்தி குறைவதுவரை இந்தியாவுக்கு சர்வதேச நிலைகள் சாதகமாக உள்ளன.

இதே நிலை சுதந்திரம் அடைந்து 30 வருடங்கள்வரை இருந்தது. நேருவும் இந்திராவும் கொத்துபரோட்டா போட்டு இந்தியாவை பிச்சை எடுக் கவிட்டார்கள். அதை சரிசெய்ய இன்னும் 20 வருடங்கள் பிடிக்கலாம்.

உள்நாட்டிலோ கருப்புபணத்திலே இருந்து ஊழலுக்கான எல்லாவழிகளும் அடைக்கப்படுகின்றன. நாட்டின் ஒருங்கிணைப்பு பொருளாதாரம், சட்டம், கொள்கை என எல்லா வழிகளிலேயும் உறுதிப்படுத்தப் படுகிறது.

இப்படி இருக்கும்போது எந்தசக்தி இந்தியா மீது தாக்க துணியும்? இதைக்கூட புரிந்து கொள்ள வேண்டாமா?

சர்வதேச அரசியல் என்பது பலநூறு பக்கங்களும் பல்லாயிரம் காய்களும் உள்ள சதுரங்கம். அதை புரிந்துகொள்வதே கடினம். அதிலே விளையாடுவது எல்லாம் சிலருக்கே வாய்க்கும். இப்போது அப்படி விளையாடும் தலைமை நமக்கு கிடைத்திருக்கிறது.

அதை, அவரை ஆதரிக்காவிடிலும் பரவாயில்லை. சந்தேகிக்காமல் குற்றம் சொல்லாமல் இருங்கள் போதும். சரி இறுதியாக சீனா அடங்கிவிட்டதா? இல்லை. திரும்பவும் இதே போல் நடக்கலாம். அதை கண்காணிப்போம் என தளபதி ராவத் சொல்லியிருக்கிறார்.


பக்கிகள்? பக்கிகளுக்கு தேவையான கடப்பாரையை டிரம்ப் ஆப்கானிஸ்தான் வழியாக சொருகி விட்டார். இந்தியா தேவையானதை காஷ்மீரிலும் பலுச்சிஸ்தானிலும் செய்யும்.

மோடி அடுத்து மியான்மர் செல்கிறார். மியான்மரை உளவுத் தளமாக சீனா பயன்படுத்தி வந்தது தடுக்கப்படும், கூடவே ரோங்கியாபிரச்சினை இந்தியாவை பாதிக்காமல் இருக்க புரிந்துணர்வு செய்யப்படும்.

இது மோடி, டோவல், சுஷ்மா, ஜெய்ஷங்கர், உட்பட அனைவருக்குமான வெற்றி. நம்முடைய சக்தி என்ன என்பதை உணருங்கள். நம்மால் முடியும்.

நன்றி – தேசபக்தர்கள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...