உள்நாட்டு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள, 25 ஆயிரம்கோடி

காவல் துறை நவீனப் படுத்துதல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள, 25 ஆயிரம்கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது," என, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

பிரதமர், நரேந்திரமோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த மூன்று நிதியாண்டுகளில் மேற்கொள்ள

உள்ள திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத்சிங் கூறியதாவது:

காவல்துறையை நவீனப் படுத்துதல் என்ற திட்டத்தின்கீழ், 2017 -18 மற்றும், 2019-20 நிதி ஆண்டுகளில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக, மத்திய அரசு சார்பில், 18,636 கோடிரூபாயும், மாநிலங்கள் சார்பில், 6,424 கோடி ரூபாயும் செலவிடப்பட உள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, மகளிர்பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் வாங்குவது, வயர்லெஸ் முறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இந்தநிதியில்,10,132 கோடி ரூபாய்,ஜம்மு – காஷ்மீர்,
 

வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல்பாதிப்பு உள்ள மாநிலங்களில் செலவிடப்பட உள்ளது.நாடுமுழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் இணைக்கப்பட்டு, குற்றவாளிகள் குறித்த தகவல்கள், பல்வேறுபாதுகாப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப் படும். தடய வியல் துறையில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் படும்.


ஆந்திர மாநிலம் அமராவதியில், அதிநவீன வசதிகள் உடைய, தடய அறிவியல்மையம் அமைக்கப்பட உள்ளது. இதைத் தவிர ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சி யாளர்கள் தடுப்பு மையம் சர்வதேச தரத்தில் அமைகிறது. குஜராத்மாநிலம், காந்திநகரில் தடய அறிவியல் பல்கலை அமைக்கப்பட உள்ளது.

காவல் துறையை நவீனப்படுத்தி, அனைத்து வசதிகள் உள்ளதாக உயர்த்தும் போது, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...