விஜய்க்கு எதிராக தான் பேசவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன்
யார் மக்களுக்காக களத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சி தான். இன்றைய சூழ்நிலையை பயன் படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்களா?
எண்ணூருக்கு போகட்டும், மக்களுக்காக ஏதாவதுசெய்யட்டும். களத்தில் இறங்கட்டும். சுற்றுப் பயணம் செய்யட்டும், மீனவ சமுதாயத்திற்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. தங்களது பங்களிப்பையும் அளிக்கட்டும்.
பார்க்கலாம், எப்படி அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை பார்க்கலாம். ஏற்கனவே தொடர்ந்து அரசியல் தலை வர்களும் மக்கள் நலனுக் காகத்தான் உழைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஏதோ இவர்கள் மட்டும்தான் வந்து அரசியல் செய்து விட முடியும் என்பது இல்லை. மக்கள் யாரை ஏற்றுக் கொண்டாலும் சந்தோஷம் தான். மக்கள் புத்திசாலிகள் தான், யாரை ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
மெர்சல் படம் விவகாரத்தில் தம்பி விஜய்க்கு எதிராக தான் கருத்துகூறவில்லை . படத்தில் உள்ள தவறான கருத்துகளை மட்டுமே எதிர்த்தோம் என்றும் அவர் கூறினார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.