உ.பி. மாநிலங்களவை தேர்தல் – அருண் ஜெட்லி உள்பட 9 பேர் வெற்றி

பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களை எம்.பி.க்களை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. இதில் உத்தரப்பிரதேசம் – 10, மகாராஷ்டிரா மற்றும் பீகார் தலா 6, மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகம் தலா 4, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசா தலா 3, ஜார்கண்ட் – 2, சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தலா 1 என மொத்தம் 58 எம்.பி.க்கள் இடங்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது.

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், பா.ஜ.க. சார்பில் அருண் ஜெட்லி, அனில் ஜெயின், நரசிம்ம ராவ், விஜய் பால் தோமர், கந்தா கர்தாம், அஷோக் பாஜ்பாய், ஹர்நாத் யாதவ், சகல்தீப் ராஜ்பர், அனில் அகர்வால் உள்பட 9 பேர் வெற்றி பெற்றனர். சமாஜ்வாதி சார்பில் ஜெயா பச்சன் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், கர்நாடகம் மாநிலத்தில் காங்கிரஸ்சார்பில் 3 பேரும், பா.ஜ.க. ஒரு இடத்திலும் வென்றுள்ளது. தெலுங் கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரீயசமிதி சார்பில் 3 பேரும் வெற்றி பெற்றனர். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒருஇடத்திலும் வென்றுள்ளது.

சத்தீஸ்கரில் பாஜக.வை சேர்ந்த சரோஜ்பாண்டே வெற்றி பெற்றுள்ளார். ஜார்க்கண்டில் பாஜக.வும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஒரு இடமும் வென்றுள்ளது. கேரளாவில் வீரேந்திர குமார் ஒருஇடத்தில் வென்றுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...