நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய  தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். அவர் கட்சிநிர்வாகிகளை தனித்தனியே  சந்தித்து பேச திட்ட மிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்  வகையில் பாஜக தயாராகிவருகிறது. இதன் ஒருபகுதியாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா  பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார்.

இதற்காக  ஒவ்வொரு மாநிலமாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  இந்த நிலையில்  தமிழகத்தில் சக்திகேந்திர ெபாறுப்பாளர்களை சந்திக்க அமித் ஷா  திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாளை(திங்கட்கிழமை) காலை 11 மணியளவில்  சென்னை வருகிறார். தொடர்ந்து அவர் தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் விருந்தினர்  இல்லத்தில் தங்குகிறார். பிற்பகல் 3 மணியளவில் கிழக்குகடற்கரை சாலையில்  உள்ள விஜிபி தங்க கடற்ரையில் கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை  நடத்துகிறார்.

இதில் சக்திகேந்திர பொறுப்பாளர்கள், பாஜ மாநில,  மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள்  பங்கேற்கின்றனர். இதில் சுமார் 20,000 பேர் பங்கேற்பார்கள் என்று  கூறப்படுகிறது. இந்தகூட்டத்தில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு  சந்திப்பது, வெற்றி வியூகம், பிரசாரவியூகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். 

மேலும் தமிழகத்தில் பாஜவை வலுப்படுத்துவதற்காக அடுத்த கட்டமாக என்ன  நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தமிழகரசியல் நிலவரம் குறித்தும் அவர்  லாசனை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் பாஜக நிர்வாகிகளை தனித்தனியே  சந்தித்துபேசவும் அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டம் முடிந்ததும் அன்று இரவு  அமித் ஷா சென்னையில் தங்குகிறார். மறுநாள் 10ம் தேதி காலை அவர் டெல்லி  புறப்பட்டுசெல்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...