என்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும்

என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

அஸ்ஸாம் மாநிலத்தில் தேசியகுடிமக்கள் வரைவுப் பதிவேடு(என்ஆர்சி) கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. இதில், 40 லட்சம் பெயர்கள் விடுபட்டது. இதற்கு மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். 

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இது தொடர்பாக மேற்குவங்க கூட்டத்தில் பேசியதாவது, 

"உங்களுடைய (மம்தா பானர்ஜி) எதிர்ப்பால் என்ஆர்சி நிறுத்தப்படாது. உங்களுக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் எதிர்ப்புதெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் சட்டமுறைப்படி, அஸ்ஸாமில் ஊடுருவியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்க என்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும். 

என்ஆர்சி பணிகள் அஸ்ஸாம் உடன்படிக்கைபடி நடக்கிறது. அஸ்ஸாம் உடன்படிக்கையை கொண்டுவந்தது யார்? 1985-இல் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திதான் கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சிக்கு அப்போது பிரச்னை இல்லை. ஆனால், வாக்குவங்கிக்காக தற்போது அது பிரச்னையாக உள்ளது. இதில், ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...