நன்கொடையால் அல்ல தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்க வேண்டும்

தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்கவேண்டும்; மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையால் அல்ல என்று பாஜக தேசியதலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தீனதயாள் உபாத்யாயவின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி, தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

தேர்தல் செலவுகளுக்காக,  நாடுமுழுவதும் உள்ள வாக்குச்சாவடி நிலையிலான தொண்டர்கள் இருவர் இணைந்து ரூ. 1000 பணத்தை நமோ செல்லிடப் பேசி வழியாக கட்சிக்கு வழங்க வேண்டும். தேர்தல் நன்கொடை பெறுவதில் நமதுகட்சி நேர்மையாக உள்ளதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

தொழிலதிபதிர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறும் நன்கொடையில் இல்லாது, தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்குகிறது என்பதை பெருமையுடன் அனைவரிடத்திலும் நாம் கூறவேண்டும்.

நமது வழிகள் நேர்மையாக இல்லா விட்டால், நமது லட்சியங்களை  நல்லவழியில் அடைய முடியாது. தொழிலதிபர்கள், ஒப்பந்த தாரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து நன்கொடையாக பெறும்பணத்திலும், கருப்பு பணத்திலும் கட்சி இயங்கினால், நமது லட்சியங்களை நாம் நேர்மையான வழியில் அடையமுடியாது. நேர்மையான வழியில் எவ்வாறு பயணிப்பது என்பதற்கு மற்றகட்சிகளுக்கு பாஜக வழிகாட்டியாக இருக்கவேண்டும்.

தேர்தல் செலவுகளை எவ்வாறு குறைப்பது மற்றும் அதற்கான நன்கொடையை நேர்மையான வழியில்பெறுவது குறித்து பொது விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் முன்னோடியாக பாஜக தொடங்கவேண்டும்.
அரசியலில் கருப்புபண புழக்கத்தை குறைப்பதற்காக, தேர்தல் செலவுகளுக்காக ரொக்கமாக நன்கொடை பெறுவதை ரூ. 2000-ஆக குறைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மோடி ஆட்சியில்  ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிதிமோசடியாளர்கள் விஜய் மல்லையா, நீரவ்மோடி உள்ளிட்டோர் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுத்ததால் தான் அவர்கள் நாட்டை விட்டு தப்பிசென்று விட்டனர் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...