மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்தபரபரப்பான சூழ்நிலையில் மேற்குவங்காள புதிய சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் ஜெகதீப்தங்கார் உரையாற்றினார். அப்போது, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாததால் பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். ‘பாரத்மாதாகி ஜெ’ என்ற கோஷம் எழுப்பியபடி கடும்அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வன்முறைக்கு எதிர்ப்புதெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க் கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆளுநர்உரையில் குறிப்பிடவில்லை என்றும், ஆளுநரின் உரையானது மம்தா அமைச்சரவை எழுதிக் கொடுத்த உரை என்பதால் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். வன்முறையால் இறந்து போன பாஜக தொண்டர்களின் புகைப்படங்களை ஏந்தி, சட்டசபையில் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்ததாகவும் சுவேந்து அதிகாரி கூறினார்.
தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் இறந்தவர்கள் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என காவல்துறைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |