துரியோதனன் யார்? அர்ஜுனன் யார்? என்பது மே 23 ஆம்தேதி தெரிந்துவிடும்

துரியோதனன் யார்? அர்ஜுனன் யார்? என்பது மே 23 ஆம்தேதி தெரிந்துவிடும் என பாஜக தலைவர் அமித் ஷா பிரியங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஹரியாணா மாநிலம், அம்பாலா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில்,

தலைக்கனம், ஆணவம் ஆகியவற்றை நமது நாட்டுமக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். வரலாறும்,  மகாபாரதமும் இதற்குசாட்சி. துரியோதனனும் மிகுந்த ஆணவத்துடன் இருந்தார்.

அவரைத் திருந்தச் செய்ய பகவான் கிருஷ்ணர் முயற்சி செய்தார். ஆனால் கிருஷ்ணரையே துரியோதனன் சிறைப்பிடித்தார்.

பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருந்தால், மக்களவைத் தேர்தலை வளர்ச்சி, வேலை வாய்ப்பு, விவசாயிகள், பெண்கள் விவகாரங்களை முன்வைத்துப் போட்டியிட வேண்டும்.

என்றார் பிரியங்கா.

இந்நிலையில், பிரியங்காவின் பேச்சுக்கு மேற்குவங்க மாநிலம் திஷ்னுபூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரத்தில் தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

அப்போது, இது ஜனநாயகம். நீங்கள் சொல்லி விட்டதாலேயே யாரும் துரியோதனன் ஆகிவிட முடியாது.  துரியோதனன் யார்?, அர்ஜுனன் யார்? என்பது மே 23 ஆம் தேதி நமக்கு தெரிந்து விடும் என பதிலளித்துள்ள அமித்ஷா, ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் வழக்கு பற்றி பிரதமர் மோடி பேசினார். அவர்கூறியதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...