புதிதாக அமையவிருக்கும் மத்திய அமைச்சரவையில் தனக்கு எந்தபதவியும் வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த அருண்ஜேட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அருண் ஜேட்லி, தான் எழுதிய கடிதத்தின் நகலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் எனக்கு இடம் கொடுத்தது மிகப்பெரிய கௌரவத்தையும், பல நல்ல அனுபவங் களையும் கொடுத்தது.
ஆனால் கடந்த 18 மாதகாலமாக எனக்கு மிகமோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறேன். தற்போதிருக்கும் பொறுப்புகளை எல்லாம் உங்களிடம் வாய் மொழியாக ஒப்படைத்து விட்டேன்.
பொறுப்புகளில் இருந்து இனி விலகி இருக்கவே விரும்பு கிறேன். இதன் மூலம் எனது உடல்நலம் மற்றும் சிகிச்சைக்காக எனது நேரத்தை செலவிடமுடியும். உங்கள் தலைமையால் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு எப்போதும் நான் எனதுஆதரவை அளிப்பேன்.
இந்தகடிதத்தின் மூலம், புதிய மத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட வேண்டாம் என்பதை விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் அருண்ஜேட்லி.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |