இந்தியருக்கு ஆளதெரியாது என்றதுதான் வெள்ளை சமூகம்

இந்தியருக்கு ஆளதெரியாது என்றது வெள்ளை சமூகம், காந்தியினை அரைநிர்வாண பக்கிரி என்றது.நேரு சோஷலிசம், பஞ்சசீல கொள்கை ,அணிசேரா நாடு என திரிந்தபொழுது அவரை அப்பாவிகளின் வரிசையில் வைத்து வஞ்சம் தீர்த்தது

இந்திரா அவர்களுக்கு சூனியக்காரியானார்

மன்மோகன் சிங் என்பவரை அவர்கள் மதித்தாலும் இவரிடம் பேசுவதை விட சோனியாவிடம் பேசினால் நல்லது என்ற முடிவில் இருந்தார்கள், மன்மோகனும் அதை தயக்கமின்றி ஏற்றார். 1990க்கு பின் வெள்ளமென முறையற்றவெளிநாட்டு பணம் பாய அதுதான் தொடக்கம்

அந்த வெள்ளை ஏகாதிபத்தியம் மோடிக்கு விசாகூட வழங்க மறுத்தது

அதே அமெரிக்கா இன்று மோடிக்கு மாபெரும் கவுவரத்தை வழங்கியிருக்கின்றது வடதென் அமெரிக்க கண்டங்கள் இணைந்த அமெரிக்க கண்டத்தில் போப் ஆண்டவருக்குபின் அதிககூட்டம் கூடியது மோடிக்கு என்கின்றது செய்திகள்

பொதுவாக கவுரவத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர்களின் மகாகவுரவம் பிடித்தவரான டிரம்பே மோடியின் நிகழ்வுக்கு வலியசென்று வாழ்த்தியிருக்கின்றார்

அமெரிக்க அதிபர் மோடியின் தனிபட்ட நிகழ்வில் பங்கேற்று அவரை கட்டிதழுவி பாராட்டி இருப்பது உலகை திரும்பிபார்க்க வைத்திருக்கின்றது

இஸ்ரேல் போல இந்தியா அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாகிவிட்டதாக உலகம் கருத தொடங்கிற்று இதை நாம் மோடி என்ற தனிமனிதராக பார்க்கவில்லை, இந்திய பிரதமர் மாபெரும் அங்கீகாரம்பெற்றிருப்பது தேசத்துக்கான மதிப்பாக கருதபடுகின்றது

ஹவுடி மோடி என அமெரிக்க டெக்ஸாஸ் ஹூஸ்டனில் நடக்கும் விழா உலக அதிர்வினை கொடுத்திருப்பது நிஜம் , எல்லாநாட்டு பத்திரிகையும் வரிந்து கட்டி எழுதுகின்றன‌

பாரதபிரதமர் மாஸ்கோ, டோக்கியோ, சாங்காய், பாரீஸ், லண்டன், நியூயார்க் என செல்லமுடிகின்றது, அவர்களும் வரவேற்று கொண்டாடு கின்றார்கள்

நெரு இந்திராவுக்குபின் வலிமையான இந்தியாவின் தலைவராக அவர்கள் மோடியினை பார்க்கின்றார்கள். ஆனால் அந்தோபரிதாபம் பாரத நாட்டின் ஒரு மாகாணமான தமிழகத்துக்கு வந்தால் இவர்கள் கத்துவார்கள், கொடிபிடிப்பார்கள்

கிணற்று தவளைகள் என்பது இவர்களன்றி வேறுயாருமல்ல..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...