5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது

என்னை வரவேற்றக அதிகளவில்கூடிய தொண்டர்களுக்கு நன்றி. மறக்க முடியாத வரவேற்பாக அமைந்தது. இந்த தருணத்தில், ஒவ்வொரு இந்தியனுக்கும் தலை வணங்குகிறேன்.
2014 தேர்தலுக்கு பின்னரும் அமெரிக்கா சென்றேன். தற்போதும், அமெரிக்காசென்று வந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது. இதற்கு 130 கோடி மக்களே காரணம். ஹூஸ்டன் நகரில் மிகச் சிறப்பான நிகழ்ச்சி நடந்தது. அந்தநகரில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், தங்களது ஆதரவினை தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அங்குதான், ஜனநாயகத்தின் வலிமையை அறிந்தேன்.

ஹவ்டி மோடி நிகழ்ச்சி பெரிய திரு  விழா போல் நடந்து வெற்றிபெற்றது. இந்த நிகழ்ச்சி, இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவை வெளிப்படுத்தியது. இந்தகூட்டத்தில், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் பங்கேற்றனர். வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஐக்கிய நாடுகள் சபையில், உலக தலைவர்களை சந்தித்த போது ஹவ்டி மோடி குறித்து பேசினர். உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகம்முழுவதும் நமது வெற்றி உணரப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், செப்., 28 ல், நமது தைரியமான ராணுவ வீரர்கள், சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி, உலகளவில் இந்தியாவின் பெருமையை வெளிப் படுத்தினர். இந்த இரவு நேரத்தில், வீரம்தீரம் மிக்க வீரர்களை நினைத்து பார்க்கிறேன். அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

 

7 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, இன்று(செப்., 28) டில்லி திரும்பினார். விமான நிலையத்தில், அவருக்கு பா.ஜ.,வினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்கள் பாட்டுபாடியும், இசை நிகழ்ச்சி நடத்தியும் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர், விமான நிலையம் அருகே நடந்த வரவேற்புவிழா நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியது:

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...