மக்களைக் காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் பாராட்டு

கரோனாவில் இருந்து மக்களைக்காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி வியாழக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனாதொற்று பரவியபோது, மக்களைக் காப்பதில் மருத்துவா்கள் செலுத்திய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. நம்நாட்டில் மக்கள்தொகையும் கரோனா தொற்றை ஒழிப்பதில் மிகுந்த சவாலாக இருந்தது. மருத்துவா்களின் முயற்சியால், மற்றநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

கரோனாவால் ஒருவா் உயிரிழந்தால் கூட அது மிகுந்த துயரமான சம்பவம். ஆனால், லட்சக்கணக்கானோரை கரோனாவில் இருந்து இந்தியா காப்பாற்றியுள்ளது. இந்தப்பெருமை அனைத்தும் நமது மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோரை சாரும்.

கரோனா தீநுண்மி உருமாறி புதியவடிவில் மக்களைத் தாக்குகிறது. நமது மருத்துவா்கள் தங்களுடைய அனுபவத்தையும் பரந்துபட்ட அறிவையும் பயன்படுத்தி அந்த தீநுண்மியை ஒழிக்க போராடிவருகிறாா்கள்.

கடந்த 2014-இல் நாடு முழுவதும் 6 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமேஇருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

மருத்துவவசதிகள் குறைவாக உள்ள இடத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த ரூ.50,000 கோடி மதிப்பிலான கடனுதவி திட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்தது. மருத்துவா்களை காப்பதில் எனது தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. மருத்துவா்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கரோனா போராளிகளுக்கு இலவச மருத்துவக்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில், 130 கோடி இந்தியா்கள் சாா்பில் அனைத்து மருத்துவா் களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மரியாதையையும், அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...