எஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர். ஆனால் கடந்த 8ம் தேதி முதல் முறையாக அந்தப் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், இனிமேல் எஸ்பிஜி பாதுகாப்பு என்பது பிரதமருக்குமட்டும் வழங்கப்படும். அவர்கள் குடும்பத்தினர் பிரதமருடன் அவருடைய அதிகார பூர்வ இல்லத்தில் வசித்தால் மட்டுமே வழங்கப்படும். பிரதமர் பதவியில் இருந்து விலகினால் கூட அரசு ஒதுக்கும் அதிகாரபூர்வ இல்லத்தில் முன்னாள் பிரதமர்கள் வசித்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவருக்கும், அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும் போன்ற திருத்தங்களுடன் சிறப்பு பாதுகாப்பு திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் இன்றுகாலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரியங்கா காந்திக்கு நேர்ந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். இது தொடர்பாகத் தனியாக விவாதம் நடத்தவும் கோரி இருந்தார்கள். இதன்பிறகு, பேசிய அமித்ஷா, “எந்த விதமான பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவையும் பாஜக கொண்டுவர வில்லை. இதற்கு முன் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. சோனியாகாந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பில் மட்டுமல்ல 130 கோடி மக்களின் பாதுகாப்பிலும் இந்தஅரசு அக்கறை கொண்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், ஹெச்.டி.தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெறும்போது எந்தவிதமான விவாதங்களும் நடக்கவில்லை.

எஸ்பிஜி பாதுகாப்பை சமூக அந்தஸ்தாக தனி மனிதர்கள் பார்க்கக்கூடாது. எஸ்பிஜி பாதுகாப்பு என்பது குறிப்பாக பிரதமருக்கு மட்டும் வழங்கப்படுவது, எந்த தனிப்பட்ட மனிதரும் அனுபவிப்பதல்ல. எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும்முடிவு என்பது, அவருக்கு இருக்கும் மிரட்டல்களை அறிவியல் ரீதியான ஆய்வு செய்து முடிவு செய்வதாகும்.

பிரியங்கா காந்திக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு என்பது குளறுபடியால் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கறுப்புநிற SUV காரில் வருவார் என்று பாதுகாப்புப் படையினரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதேநேரத்தில், அதே கலர் SUV காரில், மீரட்காங்கிரஸ் தலைவர் ஷர்தா தியாகியின் வந்திருக்கிறார். காரும் நேரமும் ஒரேமாதிரியாக இருந்தன, இது தற்செயலானது. அதனால் தான் ஷர்தா தியாகியின் கார் பாதுகாப்பு சோதனை இல்லாமல் உள்ளே சென்றது. பின்னர், நாங்கள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டோம். விதி மீறலுக்கு காரணமான 3 அதிகாரிகளை இடை நீக்கம் செய்துள்ளோம். சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு உயர்ந்த அந்தஸ்து பெற்ற இசட்பிளஸ் பாதுகாப்பு, ஆம்புலன்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது”.

மேலும் இதை அரசியல் பழிவாங்கல் என்கிறார்கள் கேரள இடதுசாரிகள். இது குறித்து பேச அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. கேரளாவில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 120 பேர்வரை இது வரை கொல்லப்பட்டு உள்ளனர். இது குறித்து விசாரிக்க எந்தவிசாரணை ஆணையமும் அமைக்க வில்லை.

எனது இந்தவாதம் உங்களுக்கு கசப்பை தரலாம். ஆனால் அதுதான் உண்மை. கேரளாவில் மட்டும் 120 தொண்டர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

இதற்கு பினராயி விஜயன் தலைமையிலான அரசுதான் பொறுப்பு. ஆகவே, அரசியல் பழிவாங்கல் என்று பேச இடதுசாரிகளுக்கு உரிமையே கிடையாது என்றார்.

முன்னதாக, அமித் ஷா பேசும் போது கேரள இடதுசாரி எம்பியான பினோய் விஸ்வம், பாஜக அரசாங்கத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை கையாள்வதாக குற்றம்சாட்டினார். ஆனால் உரிய அனுமதியின்றி பேசியதால் அவரது பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெற வில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...