குடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது

லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டதிருத்த மசோதா, இன்று ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105 எம்.பிக்களும் வாக்களித்தனர்.

இந்திய குடியுரிமை சட்டதிருத்த மசோதா நேற்று முன்தினம் லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த சட்டத்திருத்த மசோதா லோக் சபாவில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன.

இதனால் லோக்சபாவில் எளிதாக சட்டமசோதா நிறைவேறியது. இந்த நிலையில் நாளை ராஜ்யசபாவில் இந்தமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமைபெற முடியும்.

அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், சமணர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமைபெற முடியும்.

ஆனால் இந்தமசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்த மசோதா கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கு 102 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அங்கு மசோதாவை நிறைவேற்ற 120 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 245 இடங்களைகொண்ட மாநிலங்களவையின் தற்போதைய முழுபலம் 238 ஆகும்.

இதனால் பாஜக தனது மசோதாவை நிறைவேற்ற மற்றகட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் அதிமுக மசோதாவை ஆதரவு அளித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் அதிமுகவிற்கு 11 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர்.தீவிர விவாதங்களுக்கு பிறகு, இரவு 8.15 மணியளவில் மசோதா வாக்கெடுப்புக்கு விடப் பட்டது. மசோதாவில் எதிர்க்கட்சிகள் சார்பில், கொண்டுவரப்பட்ட சிலதிருத்தங்கள் ஏற்கப்பட்டன. பல திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து டிவிஷன் முறையில், மசோதா மீது வாக்கெடுப்பு துவங்கியது.

இதனால், இந்தசட்டம் நிறைவேறியுள்ளது. இருஅவைகளும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல்வழங்கியதும், சட்டம் நடைமுறைக்கு வரும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...