ராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ?

காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வெளியிடும் அறிக்கைகள் பாக்., பிரதமர் இம்ரான் கானின் அறிக்கையுடன் ஒத்துப் போயுள்ளது என்றும், இதனால் தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்

டில்லியில்  சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பிப்.,08 ம் தேதி நடக்கிறது. இதற்காக ஆளும்கட்சியான ஆம் ஆத்மி, பாஜ., மற்றும் காங்., கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேற்கு டில்லியில் உள்ள மட்டியாலா பகுதியில் பாஜ., வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பேசியதாவது: பலமுறை ராகுல், கெஜ்ரிவால் அறிக்கை வெளியிடுகின்றனர். உடனடியாக பாக்., பிரதமர் இம்ரானும் அறிக்கை வெளி யிடுகிறார். நீங்கள் யூடியூப் தளத்தில் அவர்களின் அறிக்கைகளை பார்த்தால், அதில் ஒற்றுமைஇருப்பதை காணலாம்.

இவர்களுக்குள் என்ன தொடர்பு இருக்கிறது என இப்போதும் நினைக்கிறேன். ராகுல், கெஜ்ரிவால் என்ன சொல்கிறார்களோ, அதையே இம்ரானும் சொல்கிறார். இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்குவந்தால், டில்லி பாதுகாப்பாய் இருக்காது. கலவரங்களை விரும்புபவர்கள் அதிகாரத்திற்கு வர உரிமை இல்லை. நாட்டில் தவறான வாக்குறுதிகள் அளிப்பதில் போட்டி வைத்தால், கெஜ்ரிவால் முதல்பரிசை பெறுவார். நீங்கள் (ஆம்ஆத்மி) அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டீர்கள்; அதை நினைவூட்டதான் இங்கு வந்துள்ளேன். மோடி போன்ற அரசு அமைய வேண்டுமா அல்லது தொடர்ந்து போராட்டங்களை நடத்துபவர்கள் வேண்டுமா என மக்கள் அளிக்கும் ஓட்டுகளே தீர்மானிக்க இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...