நவீன இந்தியாவின் புதிய துவக்கம்

நவீன இந்தியாவின் புதிய துவக்கம் இன்று தொடங்கியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியதாவது, இந்த உலகமே ஒருகுடும்பத்தை சேர்ந்தது என்பதை நம் நாடு நம்புகிறது. பலர் பூமிபூஜை நிகழ்ச்சிக்கு வராமல் தியாகம் செய்துள்ளனர். அவர்களது உடல்மட்டுமே இங்கு இல்லை, ஆனால் அவர்களின் சிந்தனை எல்லாம் இங்குதான் உள்ளன. அத்வானியால் பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்குபெற முடியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியை அவர் தொலைக்காட்சி வாயிலாக கவனித்துக்கொண்டுதான் இருப்பார். இங்கு வருகை புரிந்துள்ளள ஒருசிலருக்கும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.

பூமி பூஜையால் நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை வீசிக் கொண்டு இருக்கிறது. நமது சுயமதிப்பை மதிப்பீடு செய்துகொள்ளும் அளவுக்கு தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. பூமி பூஜையால் அனைவரையும் அழைத்துச் செல்வதற்கான அடித்தளம் இன்று அமைக்கப் பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும் பேசியவர், நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தோம். ராமர் கோயிலுக்காக 20 முதல் 30 ஆண்டுகளுக்கு போராட வேண்டும் என அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலா சாகேப் தியோரஸ் எங்களிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. தற்போது 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்தபோராட்டம் மகிழ்ச்சிகரமான முடிவுக்கு வந்து எங்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என மோகன் பாகவத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...