உங்கள் காக்கி சீருடையை எப்போதும் மதிங்கள்

ஹதராபாத்தில் உள்ள தேசியபோலீஸ் அகாடமியில், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4, 2020) பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரென் சிங் மூலம் உரையாடினார். அப்போது அவர், அவர்கள் தங்களின் வேலையையும், சீருடையையும் மதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள், தங்கள் சீருடையில் சக்தியை காண்பிப்பதற்கு பதிலாக அதனைநினைத்து பெருமைப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்று பிரதமர் மோடி கூறினார்.

“உங்கள் காக்கி சீருடையை எப்போதும் மதிக்கவேண்டும். இந்த COVID-19 இன் போது காவல் துறையினர் செய்த அர்பணிப்புடன் கூடிய பணி என்றென்றூம் நினைவில் கொள்ளப்படும் என பிரதம மோடி கூறினார்.

தனது உரையின்போது, ​​அகாடமியில் இருந்து வெளியேறிய இளம் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அவர்களை சந்திக்க முடியவில்லை என்றார்.

“ஆனால் எனது பதவிக்காலத்தில், நான் நிச்சயமாக உங்கள் அனைவரையும் ஒரு கட்டத்தில் சந்திப்பேன் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

ஐ.பி.எஸ். பணியில் தினம்தினம் புதிய புதிய சாவால்களை எதிர் கொள்ளும் நிலை உள்ளதால், அதிகளவு மன அழுத்தம் உள்ளது, அதனால்தான் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களுடன் தொடர்ந்துபேசுவது முக்கியம். மன அழுத்தத்தை போக்க யோகா மற்றும் பிராணாயாமம் பயிற்சியை மேற்கொள்ளவும். ”

பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “ஆரம்ப கட்டத்திலேயே இளைஞர்கள் தவறானபாதையில் செல்வதை நாம் தடுக்கவேண்டும், மேலும் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் பெண்கள் காவல் துறையினர் அதைச் சாதிக்க முடியும்” என்றும் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...