விவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில்இருந்து, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீக்க வகைசெய்யும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்தமசோதாவை, 2020 ஜூன் 5-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மாற்றாக, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு. தான்வே ராவ்சாகிப் தாதாராவ், மக்களவையில் கடந்த 14-ம் தேதி அறிமுகம் செய்தார். இந்தமசோதா, மக்களவையில் கடந்த 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020, தனியார் முதலீட்டாளர்களுக்கு, தங்கள்வணிக நடவடிக்கைகளில் ஒழுங்குமுறை தலையீடுகளால், ஏற்படும் அச்சத்தை அகற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. உற்பத்தி செய்து, சேமித்துவைத்து, கொண்டு சென்று, விநியோகிப்பதில் சுதந்திரமான செயல்பாட்டுக்கு இது வழிவகுக்கும். இதன் மூலம், விவசாயத் துறையில், தனியார்துறை / அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க இது வகைசெய்யும். குளிர்பதன வசதிகள், உணவு விநியோகத்தில் நவீனமயமாக்கம் ஆகியவற்றையும் இது ஊக்குவிக்கும்.

ஒழுங்குமுறை சூழலைத் தளர்த்தும் அதே வேளையில், நுகர்வோரின் நலன்களை அரசு இதில் உறுதிசெய்துள்ளது. போர், பஞ்சம், அசாதரணமான விலை ஏற்றம், இயற்கை பேரிடர்கள் போன்ற சூழ்நிலைகளில், விவசாய உணவுப்பொருட்களை ஒழுங்குபடுத்தும் வசதி அதில் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மதிப்புகூட்டு நிறுவு திறனில் பங்கேற்போர், ஏற்றுமதி தேவைக்கு ஏற்ப, ஏற்றுமதியாளர்கள் இது போன்ற பொருட்களை சேமித்து வைப்பதற்கான வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம், விவசாயத்துறையில் முதலீடு செய்பவர்கள் ஊக்கமிழக்க மாட்டார்கள்.

மாநிலங்களவையில், இன்று இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு நடந்த விவாதத்திற்குப் பதிலளித்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு. தான்வே ராவ்சாகிப் தாதாராவ், சேமிப்பு வசதிகள் இல்லாததால், விவசாய விளைபொருட்கள் பெருமளவுக்கு வீணாவதை தடுக்க இந்தத்திருத்தம் அவசியமாகிறது . இந்த மசோதா, விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், நுகர்வோர், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கும் ஆக்க பூர்வமான சூழலை உருவாக்கும் , இது, நம் நாட்டை தன்னிறைவு பெற்றதாக மாற்றும், விவசாயத் துறையில், ஒட்டுமொத்த விநியோகச்சங்கிலி முறையை வலுப்படுத்தும். இந்தத்திருத்தம், இத்துறையில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் உறுதிமொழி இலக்கை எட்ட உதவுவதுடன், எளிதாக வர்த்தகம்புரியவும் வழி வகுக்கும்.

இந்தியா பெரும்பாலான விவசாய விளைபொருட்கள் உற்பத்தியில் உபரி நிலையை எய்தியுள்ள போதிலும், குளிர்பதனவசதிகள், சேமிப்பு கிடங்குகள், பதப்படுத்தும் வசதிகளில் முதலீடு குறைவாக இருப்பதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப்பெற இயலாத நிலை நிலவுகிறது.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தால், தொழில் முனைவோரின் ஊக்கம்குலைந்து, ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. அமோக அறுவடை காலங்களில், குறிப்பாக அழுகும் பொருட்களால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இந்தச் சட்டம் குளிர்பதன வசதிகள் மற்றும் நவீனமயமாக்கலில் முதலீட்டை ஈர்க்கும். இது, விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நிலையான விலையைப் பராமரிக்க உதவும். சந்தைகளில் போட்டிசூழலை உருவாக்குவதுடன், சேமிப்பு வசதிகள் குறைபாட்டால், விவசாய விளைபொருட்கள் வீணாவதையும் தடுக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு அளித்து, அவர்கள் தங்களின் விருப்பங்களை ...

இந்தியாவின் முதல் விமான உற்பத் ...

இந்தியாவின் முதல் விமான உற்பத்தி ஆலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வதோதராவில் இந்தியாவின் முதல் விமான ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக உ ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக  உயர்த்தும் லக்பதி தீதிதிட்டம் பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...