இந்திரனின் யானைக்கு சாப விமோச்சனம் தந்த ஐராவதம் சிவன்

கும்பகோணத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே தரசுராம் என்ற சிறிய தாலுக்கா. அந்த சிறிய ஊரில் உள்ளதே ஐராவதம் என்ற ஆலயம். இந்திரனின் ஐராவதம் அதாவது யானை இந்த ஆலயத்தில் வந்து சிவனை வழிபட்டு தமக்கு துர்வாச முனிவரினால் ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொண்டதாம்.

அதன் நிறமே அவரது சாபத்தினால் மாறிவிட தனக்கு தன்னுடைய உண்மையான நிறம் மீண்டும் கிடைக்க வேண்டும் என பிரார்தனை செய்ததாம். தேவ லோகத்தில் இருந்து வந்து லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை அந்த யானை வழிபட்டு வணங்கியதினால் அந்த சிவலிங்கம் ஐராவதர் பெயரிலேயே அமைந்ததாம்.

அது மட்டும் அல்ல யமதர்மராஜர் ஒரு ரிஷியின் சாபம் பெற்றார். அதன் விளைவாக அவருடைய உடம்பு முழுவதும் நெருப்புப் போல எரியத் துவங்க அவர் ஐராவதத்தின் ஆலோசனையின் பேரில் இந்த ஆலயத்திற்கு வந்து அங்குள்ள குளத்தில் முழுகி குளித்தவுடன் அந்த எரிச்சல் நின்றதாம். ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைச் சேர்ந்தது. அந்த ஆலயத்தில் கரிகால சோழனும், மற்ற சோழ அரசர்களும் வந்து சிவபூஜை செய்து அவரை வழிபட்டனராம்.

காவிரி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரினால் நிறப்பப்படும் ஆலயக் குளத்தில் நீராடினால் சர்வ தோஷங்களும் ரோக சம்மந்தமான நோய்கள் தீரும் எனவும், மரண பயம் மனதைவிட்டு விலகும் எனவும் சில பண்டிதர்கள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில் அதற்குக் காரணம் ஐராவதம் அருகில் இருந்த காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரை தன் துதிக்கையில் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்ய அந்த புனித நீர் அருகில் இருந்த குளத்தில் சென்று விழுந்ததாம். அங்குதான் யமதீர்த்தம் எனப்படும் குளம் தற்போது உள்ளதாம்.

இது நம்பிக்கையில் வந்துள்ள கிராமியக் கதையாகவே இருக்க வேண்டும், ஏன் எனில் கல்வெட்டுக்களில் அத்தகைய விவரங்கள் காணப்படவில்லை. ஆனால் அற்புதமான கலையழகில் கட்டப்பட்டு உள்ள ஆலயம் காரணம் இன்றி அத்தனை நேர்த்தியாகக் கட்டப்பட்டு இருக்க முடியாது. ஆலயத்தில் பார்வதி தேவி பெரியநாயகி அம்மன் என்ற பெயரில் தனி சன்னதியில் காட்சி தருகிறார். சிவன் சன்னதியை குதிரைகள் ஒரு இரதத்தில் இழுத்துச் செல்வது போல காணப்படுகின்றது.

Tags; சிவன் கோவில்களில், சிவன் கோவில் , சிவன் கோவிலில் , கோவிலுக்கு, சிவன் கோயில்

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...