முன்னதாக, பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கில் ஆஜரானான தமிழக அரசு வழக்கறிஞர், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், வேல்யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழக அரசின் தடையைமீறி வேல் யாத்திரையை தொடங்க முற்பட்டஎல்.முருகன் உட்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினரை கைது செய்து பேருந்தில் அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில், தங்களின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் தாக்கல்செய்த மனு மீதான விசாராணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கொரோனா பொதுமுடக்கநிலை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் டாஸ்மாக், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. 30 பேர் யாத்திரைசெல்வதில் என்ன அபாயம் இருக்கப் போகிறது. எங்கள் தலைவருக்கு பாதுகாப்பு கோருகிறோம் என்று விசாரனனையில் பாஜக வாதிட்டது.
இருதரப்பு வாதங்கையும் கேட்ட நீதிபதிபதிகள், வழக்கை வரும்பத்தாம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, காவல்துறை விதித்த தடையை உயர்நீதிமன்றம் நீக்க மறுத்த நிலையில், திட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் என பாஜக தமிழக தலைவர் முருகன் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |