திக்விஜய்சிங், கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் துரோகிகள்

கமல்நாத், திக்விஜய் சிங் ஆகிய இருவரும் மத்திய பிரதேசத்தின் மிக பெரிய துரோகிகள் என ம.பி. இடைத் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நிரூபித்துள்ளனர் என ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில், பாஜக மட்டுமே 18 இடங்களை வென்றுள்ளது.இதுகுறித்து ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:

”இந்தவெற்றிக்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடியின் உயர்ந்த தலைமை, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முக்கியக் காரணம்.

அடுத்ததாக, ம.பி.யின் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மாநிலத் தலைவர் வி.டி. சர்மா உள்ளிட்ட பாஜகவின் மாநிலத் தலைவர்கள் பாராட்டுக்குரியர்கள். மேலும், இந்தமுடிவைச் சாத்தியமாக்க அனைவரும் ஒரே அணியாக நின்று பணியாற்றினர். அதேபோல தங்களது சொந்தத்தேர்தல் போலவே நிறைவாகவும் முழுமையாகவும் பணியாற்றிய ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் இந்தவெற்றி செல்லவேண்டும்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீதான நம்பிக்கையை மறுபரிசீலனை செய்து வெற்றியடைய வைத்ததற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு எனது நன்றி.அனைவரும் ஒரேசிந்தனையுடன் ஒன்றிணைந்து செயல்படும் பாஜக போன்ற கட்சியில் பணியாற்றுவது எனது பாக்கியம் மற்றும் மரியாதை என நான் கருதுகிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்) ஹேக்செய்து சேதப்படுத்தலாம் என்ற முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் பேசியிருக்கிறார். ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் வேறு என்ன செய்யமுடியும். மக்கள் தீர்ப்பை நீங்கள் ஏற்கவில்லை என்றால், மக்கள் உங்களை தொடர்ந்து ஒதுக்கிவைப்பார்கள், திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டியபாடம் இதுதான்.

இந்த உறுதியான வெற்றியைப் பற்றி கமல்நாத், திக்விஜய் சிங் ஆகியோரிடம் நான் சொல்ல விரும்புவது எதுவுமில்லை. ஏனெனில் இந்தத்தீர்ப்பின் மூலம் மத்தியப் பிரதேச மக்கள் அவர்களிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்திற்கு யாரேனும் துரோகிகள் இருந்தால், அவர்கள் திக்விஜய்சிங் கமல்நாத் ஆகிய இருவரும்தான் என மத்தியப்பிரதேச மக்கள் கருதுகின்றனர், இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பில் இதுமிகவும் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. இதன் மூலம் இந்தத் தேர்தலுக்குப் பிறகாவது வெளியே வாருங்கள் என மக்கள் அவர்களுக்குத் தெரிவித்துவிட்டனர்”என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய அரசும் மாநில அரசும் இணக் ...

மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இறுக்க வேண்டும்- அரசியல் பேசும் ஆதினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு ...

மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்த ...

மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ...

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ...

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலைப்பணிகல் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் கர்நாடகாவிற்குள் அனைத்து ...

பேரிடர் நிவாரண நிதியை எப்போது த ...

பேரிடர் நிவாரண நிதியை எப்போது தருவீர்கள் என்ற MP கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் 'நிவாரணம் கிடையாது' என ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில் ...

நெத்தன்யாகுவுக்கு பிடிவாரண்ட் ...

நெத்தன்யாகுவுக்கு பிடிவாரண்ட் – ஜெய் சங்கர் விளக்கம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான பிடிவாரண்ட் குறித்து ...

இந்தியாவில் முதலீடு செய்வது லா ...

இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின் மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...