விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும்நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப் பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமை  தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள்செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரிமைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி-அரியானா எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காசியாபாத் பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாய குழுக்களுடன் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இதனால், போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்துவருகிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா என பாஜக மூத்த தலைவரும், அரியானா வேளாண் மந்திரியுமான ஜேபி டலால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேபி டலால் கூறியதாவது:-

வேளாண்சட்டங்களால் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் நினைக்கிறார்கள் என்றால் முடிவுக்காக காத்திருக்கவேண்டும். ஒருவருடமோ, இரண்டு வருடமோ, மூன்று வருடமோ காத்திருக்க வேண்டும்.

இந்த சட்டங்களால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால் நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சட்டத்தில் மாற்றம்வேண்டும் என கோரிக்கை வைக்கலாம். நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

மருத்துவர் மருந்து கொடுக்கும்போது, நீங்கள் அதைசாப்பிட தயாராக இல்லை. மேலும், அதைசாப்பிட்டால் இறந்துவிடுவோம் என கூறுகிறீர்கள். நீங்கள் இப்படி முடிவுகளை எடுக்கக் கூடாது.

இது விவசாயிகளை பற்றியதல்ல. விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரிநாடுகள் இந்தியாவை நிலைகுலைய வைக்கவேண்டும் என நினைக்கின்றன.

என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...