`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு!’ – ரஜினி

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, `நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பின்னர் சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து 2020, டிசம்பர் 31-ம் தேதி, தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடவிருக்கிறார்.

புதிய கட்சி குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த ரஜினி, “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு.

#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல.

வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, சாதி, மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

அற்புதம்… அதிசயம்… நிகழும் !!!’’ என்று தெரிவித்திருந்தார்

இந்தநிலையில், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார் ரஜினி. அவர் கூறுகையில், “ `நான் அரசியலுக்கு வருவேன்’ என்று 2017-ம் ஆண்டு டிசம்பரிலேயே சொல்லியிருந்தேன். உள்ளாட்சித்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியைத்தொடங்கி தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொல்லியிருந்தேன்.

அதற்குப்பின்னர் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் உங்களையெல்லாம் சந்தித்து, மக்களிடம் எழுச்சி வரவேண்டும் என்று கூறினேன். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தேன். கொரோனா காலத்தில் அது முடியாமல்போனது. தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் சந்தோஷப்படுவேன்.

ஓர் அரசியல் மாற்றம் ரொம்பகட்டாயம். அது காலத்தின்தேவை. அது இப்போ இல்லைன்னா… எப்பவும் கிடையாது. எல்லாத்தையும் மாத்தணும். நான் சொன்னசொல் எப்போதும் தவறியதில்லை. நான் ஒருகருவிதான். நான் அரசியலுக்கு வருகிறேன். நான் வெற்றி பெற்றாலும், அது மக்களின் வெற்றிதான். தோல்வியடைந்தாலும் அதுவும் மக்களின் தோல்விதான். இந்தமாற்றத்துக்கு நீங்க எல்லாரும் துணையா நிக்கணும். `அண்ணாத்த’ ஷூட்டிங் இன்னும் 40 சதவிகிதம் இருக்கிறது. அதை முடித்துக் கொடுப்பது கடமை.

கட்சி தொடங்குவது ராட்சதவேலை. கட்சி தொடங்குவதற்கு அவ்வளவு வேலைகள் இருக்கின்றன. இந்தப்பாதையில் வெற்றியடைவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. அரசியல் மாற்றம்; ஆட்சிமாற்றம் வேண்டும். இப்ப இல்லைன்னா.. எப்பவும் இல்லை’’ என்றார்.

ரஜினியின் செய்தியாளர் சந்திப்பின்போது காந்தியமக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன், மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் ரஜினி நியமித்திருக்கிறார்.

புதிய அரசியல்கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி வருகிறார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...