பிரதமர் கிசான்திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திரமோடி 25-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலிகாட்சி வாயிலாக வெளியிடவிருக்கிறார். பிரதமர் ஒரு பொத்தானை அழுத்தியவுடன் 9 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி உதவி அவர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நிகழ்ச்சியின் போது பிரதமர் கலந்துரையாடுவார். பிரதமர் கிசான் திட்டத்தில் தங்களது அனுபவங்கள் குறித்தும், விவசாய நன்மைக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |