அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, சட்டப் பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அந்தத்தொகுதியில் வேட்பாளர் பெயர்களும் அண்மையில் சோஷியல் மீடியாவில் வலம்வந்தன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். “தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் பாஜக நடக்கிறது. ரஜினி ஆதரவுதெரிவித்தால் பாஜக வரவேற்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிகுறித்து தேர்தல் முடிந்த பிறகு அதுகுறித்து பேசிக்கொள்ளலாம். அஞ்சல்துறை தேர்வில் தமிழ்மொழி சேர்க்கபடும் என மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும்.
தமிழகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்க வில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை எப்படி முடிவுசெய்கிறதோ அதன்படியே செயல்படுவோம். அனைத்து கிறிஸ்தவ, முஸ்லீம் சகோதரர்கள் பாஜகவில் ஆர்வமுடன் சேர்ந்து வருகிறார்கள். நாட்டை சரியான பாதையில் பாஜக கொண்டுசெல்கிறது. அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கேட்டோமா என்ற யூகத்திற்கு பதில்சொல்ல விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் நெருக்கடி கொடுக்க வில்லை. தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவுசெய்யப்படும்” என எல்.முருகன் தெரிவித்தார்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |