ஆளுமைமிக்க தலைவர் மறைந்தபின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது என பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.,நட்டா புகழாரம் சூட்டினார்.
பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.,நட்டா பொங்கல்விழா மற்றும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். துக்ளக்விழாவில் அவர் பேசியதாவது:வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னெடுத்து செல்வதை பிரதமர் மோடி உறுதிசெய்துள்ளார். தமிழகத்தில் வரும் காலத்தில் பா.ஜ., ஆட்சி அமையும். அதனால்தான் பல்வேறு துறையினர் பா.ஜ.வில் இணைகின்றனர்.
ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்கவைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது . இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் தோன்றிய நாட்டா அனைவருக்கும் வணக்கம், பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில்பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் வாழ்ந்த ஆன்மிக பூமி தமிழ்நாடு. தமிழ்மண்ணில் பொங்கல் விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. திருவள்ளுவர் மிகபெரிய ஆசான் . அவரது புகழ் நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |