தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் தமிழகவளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு பல்வேறு நல திட்டங்களை தொடக்கிவைத்தார்.
பின்னர் உரையாற்றியவர், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி உரையைத் தொடக்கினார். பின்னர் ஒளவையார், பாரதியார்பாடல் மேற்கோள் காட்டி மோடி உரையாற்றினார்.
ஆயுதம் செய்வோம், நல்லகாகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்; நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் என்ற மகா கவி பாரதியாரின் பாடலை ஏற்கோள் காட்டி பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.
வரப்புயர நீர் உயரும்; நீர்உயர நெல்உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோல் உயரும்; கோல் உயர கோன் உயர்வோன் என ஒளவையார் பாடைலையும் மேற்கோள் காட்டினார்.
தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவும். கல்லணை கால்வாய் சீரமைப்பால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும்பயனடையும்.
அர்ஜூன் பீரங்கி தயாரிப்பின் மூலம் பீரங்கி உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்கிறது.
நீர் மேலாண்மையில் சிறந்துவிளங்கி தானிய உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை புரிந்துள்ளது
கரோனா பொதுமுடக்க சூழல் இருந்த போதும் மெட்ரோ விரிவாக்க பணிகள் நடந்து முடிந்துள்ளன.
228 கிலோமீட்டர் தூர ரயில்பாதை மூலம் உணவுதானியம் விரைவாக கொண்டு செல்லப்படும்.
புதிய ரயில்பாதை மின்மயமாக்கல் டெல்டா மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
யாழ்பாணம் சென்ற ஒரேபிரதமர் நான்:
இலங்கையிலுள்ள யாழ்பாணத்திற்குச் சென்ற ஒரே இந்திய பிரதமர் நான்மட்டுமே என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் பேசியவர், இலங்கைத் தமிழர்களின் நலன்காக்கும் அரசு மத்திய அரசு.
இலங்கைவாழ் தமிழக சகோதர, சகோதரிகள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்திவருகிறது. இலங்கை தமிழர்களின் நலன் குறித்து அங்குள்ள தலைவர்களிடம் வலியுறுத்தும் ஒரே அரசு மத்திய அரசுதான்.
இலங்கை தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்துள்ளோம்.
தமிழக மீனவர்கள் உரிமைகாக்கப்படும்:
தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. மீனவர்களை நினைத்து தேசம் பெருமைக்கொள்கிறது. அவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
தமிழக மீனவர்களின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு உறுதிசெய்யும். இலங்கை சிறையில் தற்போது தமிழக மீனவர்கள் யாரும் இல்லை. பிடித்து வைக்கப்பட்டிருந்த படகுகள்கூட விடுவிக்கப்பட்டுள்ளன. இலங்கையால் எப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
7 பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்று விடுத்தகோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படுவார்கள்.
தேவேந்திர குலவேளாளர் சகோதர சகோதரிகள் பாரம்பரிய பெயரால் இனி அழைக்கப் படுவார்கள்.பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி முடித்தவுடன் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் கை உயர்த்தியபடி மகிழ்ச்சிதெரிவித்தார்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |