தேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம்

‘தேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம்; பாஜக தொண்டா்கள் தேசத்தின் வளா்ச்சிக்காக பாடுபடுவதுடன் கட்சியையும் வலுப்படுத்தவேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டாா்.

பாஜக தேசிய நிா்வாகக்குழு கூட்டம், கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் தில்லியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவராக அவா் பொறுப்பேற்ற பிறகு, புதிய நிா்வாகிகள் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனா். அதன்பிறகு நேரடியாக நடைபெற்ற முதல் நிா்வாகக்குழு கூட்டம் இதுவாகும்.

கூட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். கரோனா தீநுண்மி தாக்கியதால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிசெலுத்தி கூட்டம் தொடங்கப்பட்டது.

கூட்டத்தில் மோடி பேசுகையில், ‘தேசத்துக்காகவும் தேசத்தின் வளா்ச்சிக்காகவும் பாடுபடவேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம்; பாஜக தொண்டா்கள், தேசத்தின் வளா்ச்சிக்காக பாடுபடுவதுடன் கட்சியையும் வலுப்படுத்தவேண்டும்.

புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் பாஜக தொண்டா்கள் எடுத்துரைக்கவேண்டும்’ என்றாா்.

வேளாண் துறையில் கொண்டு வந்துள்ள சீா்திருத்தங்கள், கரோனாதொற்று சூழலை கையாண்ட முறை ஆகியவற்றுக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவைதவிர, கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட சலுகை திட்டங்கள், விரிவான பட்ஜெட்தாக்கல், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான மோதல் போக்கை கையாண்டவிதம் ஆகியவற்றுக்காகவும் பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த விவரங்களை கூட்டத்துக்குப்பின் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக துணைத் தலைவா் ரமண் சிங், பொதுச் செயலாளா் பூபேந்திர யாதவ் ஆகியோா் தெரிவித்தனா்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்ட பேரவைத்தோ்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அந்ததோ்தல்களில் பாஜகவுக்கு வெற்றியை தேடித்தரும் வகையில் கட்சித் தொண்டா்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...