மே.வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மே.வங்கத்தில் அக்கட்சியின் தேர்தல்பிரச்சாரம் முன்கூட்டியே சூடுபிடித்துள்ளது.
மார்ச் 27-ல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெறும் மே.வங்கதேர்தல் அறிவிப்புக்கு பிறகு பாஜக தேசிய தலைவர்களின் பிரச்சாரக் கூட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் 800 கூட்டங்கள் நடத்த பாஜக முடிவுசெய்துள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 7 ல் தொடங்கி 20 கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். மத்தியஅமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியதலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலா 60 கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜகவின் பிற தேசிய தலைவர்களின் கூட்ட எண்ணிக்கை 700-க்கும் அதிகமாக திட்டமிடபட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசியநிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “மேற்கு வங்க வெற்றியின் மூலம் இந்திபேசாத மாநிலங்களில் எங்கள் கட்சியின் முதல் வெற்றியாக அது அமையும். எனவே, பிரதமர் மோடி உட்பட அனைவருமே தேவைக்கு ஏற்ப கூட்ட எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக உள்ளனர். இதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களை அழைக்கஉள்ளோம்” என்று தெரிவித்தனர்.
தற்போது தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் இந்திபேசாத மாநிலங்கள் ஆகும். அசாம் தவிர மற்ற நான்கிலும் பாஜக ஆட்சி செய்ததில்லை. எனவே, இந்த 5 மாநில தேர்தல் பாஜகவுக்கு பெரும்சவாலாக உள்ளது.
அசாமில் 2-வது முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த பிரதமர் மோடி 7 கூட்டங்களில் கலந்து கொள்கிறார். மற்ற 3 மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரேநாளில் மூன்று கூட்டங்கள் நடத்தும் திட்டத்துடன் 5-க்கும் மேற்பட்டமுறை பயணம் மேற்கொள்கிறார் மோடி.
பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் 5 மாநிலங்களில் பிரச்சாரம்செய்ய உள்ளனர். இதில் உ.பி.முதல்வரான யோகி ஆதித்யநாத் அதிககூட்டங்களில் கலந்து கொள்கிறார். இவர் முதல்முறையாக தமிழக தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்துகொள்ள திட்டமிடப்படுகிறது.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |