புதுச்சேரியில் பாஜக – அதிமுக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியே வெற்றிபெறும்

புதுச்சேரியில் பாஜக – அதிமுக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இளைஞர்களின் பேராதரவைபெற்றிருப்பது ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் இணைந்து நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. 23-27 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில், கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றி வருகிறது பாஜக.

இந்நிலையில், இந்த சட்டமன்றதேர்தலை பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியமைத்து வலுவான கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்துவிட்டநிலையில், பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதை உறுதிசெய்துள்ளது சர்வே.

ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் மார்ச் 5 முதல் 12 வரை 5077 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் கருத்துகேட்டது. அந்த கருத்துகணிப்பில், 52% பேர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36% பேர் மட்டுமே திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், 23-27 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் என்று சர்வே தெரிவிக்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வெறும் 3-7 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று சர்வே தெரிவிக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இளைஞர்களின் பேராதரவு பாஜக கூட்டணிக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. வயது வாரியாக எடுக்கப்பட்ட சர்வேயில், 18-25 வயதினரில் 56% பேர் பாஜக – அதிமுக கூட்டணிக்கும், 37% பேர் மட்டுமே திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தவயது பிரிவினர்தான் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள். அவர்களின் ஆதரவு பாஜகவிற்கு அமோகமாக இருப்பதை சர்வே உணர்த்துகிறது.

அதேபோல, 26-35 வயதினரில் 48% பேர் பாஜக கூட்டணிக்கும், 38% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித் துள்ளனர். 36-50 வயதினரில் 51% பேர் பாஜக கூட்டணிக்கும், 33% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவுதெரிவித்தனர்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆதரவும் பாஜகவிற்கே உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களில், 53% பேர் பாஜகவிற்கும், 34% பேர் காங்கிரஸுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தசர்வேயின் மூலம் புதுச்சேரியில் இளைஞர்களின் பேராதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியேவிட்டது. இந்த சர்வேயை கண்டு காங்கிரஸ் கலங்கித்தான் போயுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...