திமுகவினரும் எனக்கு வாக்களிப்பார்கள்

மதுரை வடக்குதொகுதியில் திமுகவினரும் எனக்கு வாக்களிப்பார்கள் என பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரையில் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவாக 2 ஆண்டுகள் இருந்தேன். முருகப்பெருமானை கருப்பர் கூட்டம் இழிவுபடுத்தியது எனக்குவருத்தமாக இருந்தது. அப்போது நான் எதிர்ப்புதெரிவித்தேன்.

இதை திமுக தலைமை கண்டிக்க வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தினேன். அதன்பிறகு திமுகவில் சின்னசின்ன நெருடல்கள் ஏற்பட்டன. அது இப்போது வெடித்துள்ளது.

பாஜகவில் நான் முன்கூட்டியே பேசிவந்ததாக திமுகவினர் பொய் சொல்கின்றனர். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நான் பாஜகவில் இணைந்துள்ளேன். சிறப்பான சட்டப்பேரவை உறுப்பினராக பெயர்வாங்கியுள்ளேன். பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கிவருகிறேன். மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிமையம் நடத்தி வருகிறேன். இதனால் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

பாஜகவில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அனைவரும் ஒன்றாகவே பணிபுரிந்துவருகிறோம். திமுகவில் உள்ள என் ஆதரவாளர்களும் விரைவில் பாஜகவில் இணைவார்கள். நான் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதை அதிமுகவினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். திமுகவினரும் எனக்கு வாக்களிப்பாளர்கள். சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரியதோல்வியை சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மாநில பொதுச்செயலர் ராம.ஸ்ரீனிவாசன் கூறுகையில், ‘மதுரை வடக்குதொகுதி வேட்பாளராக என் பெயரும், மதுரை புறநகர் மாவட்டதலைவர் மகாசசீந்திரன் உட்பட பலர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கட்சி யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கலாம். அதை கேள்விகேட்க முடியாது. கட்சி ஒரு முடிவெடுத்தால் அதை ஏற்றுசெயல்படுவது எங்களின் கடமை.

கட்சி பல்வேறு கோணங்களில் ஆய்வுசெய்து டாக்டர் சரவணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த 50, 60 பேர் 5 நிமிடங்கள் மட்டும் தேர்தல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

சரவணன் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே மாநிலத்தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோர் என்னிடம் பேசி சம்மதம்பெற்றனர். இதனால் எங்களிடம் பிரச்சினை இல்லை. மதுரை வடக்கில் சரவணன் வெற்றிபெறுவார் என்றார்.

One response to “திமுகவினரும் எனக்கு வாக்களிப்பார்கள்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு ப ...

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் ஹரியானா தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதம ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு க ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைக்கிறது -அமித்ஷா குற்றம் சாடியுள்ளார் இளைஞர்களை போதைப்பொருட்களின் இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைத்து செல்ல ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...