ராகுலின் தேர்தல்தந்திம் மக்களிடம் எடுபடவில்லையே!

வருங்கால பிரதமர்' வருங்கால பிரதமர் என்று , காங்கிரஸ் கட்சியினரால் மட்டும் புகழப்படும் ராகுலின் தேர்தல்தந்திரங்கள், உ.பி.யில் எடுபடவில்லையே . கடந்த ஐந்தாண்டுகளாக உ.பி.யை குறிவைத்து மேற்கொண்ட நாடகமெல்லாம் மக்களிடம் எடுபடவில்லையே.

"காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமே , வருங்கால பிரதமரே , இளைய தலைமுறையின் விடிவெள்ளியே என்று , காங்கிரஸ் கட்சியினரால் மட்டும் புகழப்பட்டுவந்த, அக்கட்சியின் பொதுசெயலர் ராகுல், காங்கிரஸ் கட்சியை உ.பி ஆட்சி கட்டிலில் அமர்த்துவதற்காக மேற்க்கொல்லாத சித்து வேலைகளே இல்லை, அடிக்கடி உ.பி.,க்கு சுற்று பயணம் மேற்கொள்வது , கட்சி நிர்வாகிகளை சந்திகிறேன் என்கிற போர்வையில் மூத்த நிவாகிகளின் கோபத்துக்கு ஆளாவது , ஏழைகள் வீட்டில் தங்குவது, சாப்பிடுவது, தூங்குவது என்று இவர் மேற்கொண்ட தேர்தல் தந்திரம் ஏராளம் ஏராளம்

ராகுல் காந்தியுடன் சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா என்று அவரது மொத்த குடும்பமுமே உ.பி,யை முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்தனர். இருப்பினும் , அவர்களது தேர்தல் தந்திரங்கள், ஒட்டுமொத்த உ.பி., மக்களிடையே பலிக்கவில்லை . பீகார், ஒடிசா, தமிழகம் போன்ற கடந்த தேர்தலை போன்றே , இந்தத் தேர்தலிலும் அந்தக் கட்சி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. உ.பி., சட்டசபைத் தேர்தல் மட்டுமல்லாமல், தேர்தல் நடந்த மாநிலங்களில் மணிப்பூர் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரசால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

அமேதி, ரேபரேலி தங்களது கர்மபூமி என கூறும் காந்தி குடும்பத்தினரால் அங்கு உள்ள பெருவாருயான சட்டசபை தொகுதிகலில் கூட வெற்றி பெற முடியவில்லை, ராகுல் எம்.பி.,யாக இருக்கும் அமேதி, சோனியா எம்.பி.,யாக இருக்கும் ரேபரேலி ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், மொத்தம் 10 சட்ட சபை தொகுதிகள் இருக்கின்றன . ஆனால் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முட்டி மோதி வெற்றி பெற்றுள்ளது. மற்ற 8 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு கிடடைத்தது என்னவோ தோல்வியே . அதுவும் சோனியா குடும்பத்தினர் பல நாட்களாக முகாமிட்டு பிரசாரம் செய்ததற்கு கிடைத்த பலனாகவோ கூட இது இருக்கலாம்.

எது எப்படியோ ஜனவரி மாதம் 30-ம் தேதி சிதாபூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதை மட்டும் மக்கள் கெட்டியாக பிடித்து கொண்டார்கள் என்பது மட்டும் உண்மை அப்படி எனதான் பேசினார் ! " உத்திரப் பிரதேச மக்கள் எனது வார்த்தைகளை நம்பி வாக்களிக்க வேண்டாம், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து வாக்களியுங்கள்." என்று பேசினார் அதை மக்கள் தங்கள் வாக்கில் காட்டிவிட்டார்கள்

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...