சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் கர்நாடகாவிற்குள் அனைத்து பணிகளும் முழுமை பெற்றுவிட்டன. இன்னும் தமிழகப் பணிகள் மட்டும் எஞ்சியுள்ளன. இதுதொடர்பாக எதிர்பார்ப்பு நீடித்து வரும் நிலையில் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்கின்றனர். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் எம்.பிக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அதில், மொத்தம் 261.70 கிலோமீட்டர் நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ்வே சாலையில் தமிழகத்தில் மட்டும் 105.70 கிலோமீட்டர் தூரம் இடம்பெற்றுள்ளது. இதற்காக 7,525 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |