:”மொழியை வைத்து சர்ச்சையை உருவாக்கும் மாநில கட்சிகள், அரசியல் பலன்களை அடைய முடியுமே தவிர, இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை இழக்கின்றன. இதனால் அம்மாநிலங்கள் படிப்படியாக வீழ்ச்சியை சந்திக்கின்றன,” என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உ.பி., மக்கள் தொகையில், 20 சதவீதம் முஸ்லிம்கள் இருந்தாலும், அரசு நலத்திட்ட பயனாளிகளில் அவர்களின் பங்கு, 35 – 40 சதவீதமாக உள்ளது. எனக்கு பாகுபாட்டிலும் நம்பிக்கை இல்லை, தாஜா செய்யும் அரசியலிலும் நம்பிக்கை இல்லை.
மாநில வளர்ச்சியில் முஸ்லிம்களுக்கு நியாயமான பங்கு வழங்கப்படும். அதே நேரம் சிறுபான்மையினர் என்பதால், சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்க கூடாது.
சாலைகள் பாதசாரிகளுக்கானது. அங்கு தொழுகை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை எதிர்ப்பவர்கள் ஹிந்துக்களிடம் இருந்து ஒழுக்கத்தை கற்க வேண்டும்.
பிரயாக்ராஜில் கும்பமேளாவுக்காக, 66 கோடி ஹிந்துக்கள் திரண்டனர். அங்கு கொள்ளை, பொது சொத்து சேதம், தீ வைப்பு, கடத்தல் உள்ளிட்ட எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதற்கு பெயர் தான் மத ஒழுக்கம். பலன்களை அனுபவிக்க வேண்டுமெனில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
வக்பு வாரியம் சுயநலம் மிக்கவர்களின் இருப்பிடமாகவும், அரசு சொத்துக்களை அபகரிக்கும் அமைப்பாகவும் மாறியுள்ளது.
ஹிந்து கோவில்கள், மடங்களை போல கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அவர்கள் ஏதாவது உதவி செய்துள்ளனரா? மொத்த சமூகத்தை விடுங்கள்; முஸ்லிம்களுக்கு கூட அவர்கள் எதுவும் செய்தது கிடையாது.
ஹிந்து கோவில்கள், மடங்களை போல கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அவர்கள் ஏதாவது உதவி செய்துள்ளனரா? மொத்த சமூகத்தை விடுங்கள்; முஸ்லிம்களுக்கு கூட அவர்கள் எதுவும் செய்தது கிடையாது.
வக்பு வாரிய சட்டத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தினால் முஸ்லிம்கள் பயன் அடைவர். சில மாநிலங்கள் மொழியை வைத்து சர்ச்சையை உருவாக்குகின்றன. இதை வைத்து அவர்கள் அரசியல் பலன்களை மட்டுமே அடைய முடியும். அம்மாநில இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அவர்கள் இழக்கின்றனர்.
இதன் காரணமாக, அம்மாநிலங்களின் வளர்ச்சி படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. உ.பி.,யில் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. சில மாநில அரசுகளின் பிடிவாதத்தால், அம்மாநில இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை இழக்கின்றனர்.
பிரச்னையை கிளப்ப காரணங்கள் எதுவும் இல்லாததால், மொழியை வைத்து மக்களின் உணர்வுகளை துாண்டுகின்றனர்.
உ.பி., பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. இதனால் உ.பி.,க்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த அனைத்து மாநில மொழிகளும் தேசிய ஒற்றுமைக்கு அடிக்கல்லாக இருக்க வேண்டும்.
ஹிந்தி மதிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் நம்பிக்கை. அதேபோல மாநில மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதால், மூன்று மொழி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியே மிக சிறந்த உதாரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |