காங்கிரஸ் ஒருநிறுவனத்திற்கு எதற்கு , 90 கோடி கடன் கொடுக்க வேண்டும்?

 காங்கிரஸ் ஒருநிறுவனத்திற்கு எதற்கு , 90 கோடி  கடன்  கொடுக்க வேண்டும்? சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது, ஜனதா கட்சியின் தலைவர், சுப்ரமணிய சாமி கூறியிருக்கும் 1,600 கோடி ரூபாய் முறைகேடு புகாருக்கு பதில் தர வேண்டும் என, பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

சுப்ரமணியசாமி, சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது, 1,600 கோடி ரூபாய் சுருட்டல்முயற்சி புகாரை தெரிவித்தார்.அவரது புகாரின் படி முன்னாள் பிரதமர், ஜவகர்லால் நேருவால் , 1938 ஆம் வருடம் துவங்க பட்ட “அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ எனும் பத்திரிகைக்கு, காங்கிரஸ் மேலிடம்,ரூ 90 கோடியை கடனாக வழங்கியது.

அந்தக் கடனுக்காக, அந்த பொதுத்துறை நிறுவனத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ‘யங் இந்தியன்ஸ்’ என்ற நிறுவனம் கையகப்படுத்த முயற்சிக்கிறது, இந்த நிறுவனத்தில் சோனியா மற்றும் ராகுலுக்கு, 76 சதவீத பங்குகள் உள்ளன என்பது சிறப்பு அம்சம் .

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு , டில்லி மற்றும் உபி.,யின் , பல இடங்களில் 1,600 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து, பாஜக மூத்த தலைவர், அருண் ஜெட்லி, கூறியதாவது ; முதலில், சுப்ரமணிய சாமியின் புகாருக்கு பதில்சொல்லுங்கள். அரசியல் கட்சி யான காங்கிரஸ், ஒருநிறுவனத்திற்கு எதற்கு , 90 கோடி ரூபாயை கடன் கொடுக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...