நம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியதுதான்

நம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியது தான் ஒரு குளத்தில் மீன்களும் நண்டுகளும் வசித்து வந்தன. அந்த குளக்கரையில் வசித்து வந்த கிழட்டு கொக்கு, அவ்வப்போது மீன்களைப் பிடித்து தின்று வந்தது. அதிக சிரமமின்றி மீன்களைப் பிடித்துத் தின்ன என்ன வழி என்று யோசித்தது. மனதில் ஒரு தந்திரம் தோன்றியது.

வருத்தத்துடன் அமர்வதுபோல குளக்கரையில் வந்து கொக்கு அமர்ந்து கொண்டது. அதைப் பார்த்த நண்டு "கொக்காரே , ஏன் மீன்களைப் பிடித்துத் தின்னாமல் கவலையுடன் அமர்ந்திருக்கிறீர்?' என்று கேட்டது. "சில நாட்களில் மீனவர்கள் வந்து குளத்தில் மீன் பிடிக்கப் போகிறார்கள். அதன் பிறகு ஒரு மீன் கூட இருக்காது. நான் என் உணவுக்கு என்ன செய்வேன்? அதுதான் கவலை' என்று கொக்கு கூறியது. மீன்கள் பயந்துவிட்டன. "இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா?' என்று கேட்டன.

"பக்கத்திலேயே இன்னொரு குளம் இருக்கிறது, நீங்கள் சம்மதித்தால் ஒவ்வொருவராக அங்கே தூக்கிச் சென்று விடுகிறேன்' என்று கொக்கு கூறியது. மீன்கள் கொக்கின் யோசனைக்கு சம்மதித்தன. ஒவ்வொரு மீனாக கௌவிக் கொண்டு பறந்தது. சற்று தூரத்தில் உள்ள பாறையில் அமர்ந்து ஒவ்வொன்றாக உண்டது. மீன்முட்கள் பாறையில் சிதறிக்கிடந்தன.

ஒரு நாள் நண்டைத் தின்ன ஆசைப்பட்டது. கொக்கு நண்டுகளின் தலைவனை தூக்கிக் கொண்டு பறந்தது. பாறைக்கு நண்டை கொண்டுபோனவுடன் அங்கே சிதறிக் கிடந்த மீன் முட்களை பார்த்ததும் கொக்கின் நோக்கம் சட்டென நண்டுக்கு புரிந்து போயிற்று. எதிர்பாராதபடி தாவி கொக்கின் கழுத்தை தனது கொடுக்கால் பிடித்து இறுக்கியது நண்டு. கொக்கு "என்னை கொன்று விடாதே' என்றுகெஞ்சியது.

"நம்பிக்கைத் துரோகியை விட்டால் ஆபத்து' என்று கூறிய நண்டு மேலும் தன் பிடியை இறுக்கி கொக்கின் கழுத்தைத் துண்டித்துக் கொன்றது.

நீதி: நம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியதுதான்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...