நதிகள் மாசு அடைந்து வருவதை தடுக்க புதிய தொழில் நுட்பத்தை நிறுவனங்கள் கண்டு பிடிக்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி வலியுறுத்தி உள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் மேலும் பேசியதாவது: ஹிந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை மாசு அடைந்து வருவது மிகவும் வேதனையை தருகிறது. நதிகளை தூய்மை படுத்த கட்டுப்படியாகும் தொழில் நுட்பத்தை ரசாயன ஆலைகள் கண்டறிய வேண்டும். இதன் மூலம் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கமுடியும் .
கங்கை மாசடைந்துள்ளதை பார்க்கும் போது மனதுக்கு வேதனையாக உள்ளது. நதிகளுக்கெல்லாம் தாயாக கருதப்படும் கங்கைநதி மாசடைய நாம் காரணமாகிவிட்டோமா என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். ரசாயன ஆலைகள் அனைத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக செயல் படுவதை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஏற்கெனவே சிலநிறுவனங்கள் மாசுதடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன, ரசாயன ஆலைகளும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முனையவேண்டும்.
சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பொருள்மேம்பாடு ஆகிய மூன்றும் ஒன்றிணைய வேண்டிய காலகட்டமிது. இதன் மூலம் மனித குலத்துக்கு நன்மைதரும் விஷயங்களை உருவாக்க முன்வர வேண்டும் என்றார் அத்வானி.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.