ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ்க்கும் தொடர்பா?

 ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ்க்கும் தொடர்பா?  வி.ஐ.பி.க்கள் பயணத்துக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ரூ. 3600 கோடிக்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியர்கள் ரூ. 360 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நாள்தோறும் புதிதாக, புதிதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

முதலில் இந்த முறைகேட்டில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியின் உறவினர்கள் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக இத்தாலி பத்திரிகையான ‘லெட்டரா 43’யில் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், “பின்மெக்கானிக்கா நிறுவனம் இந்தியாவுக்கு 12 ஹெலிகாப்டர்கள் தயாரித்து கொடுக்க செய்த ஒப்பந்தத்தில் மொத்தம் ரூ. 450 கோடி இந்தியர்களுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் இதில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். கிறிஸ்டியன் மைக்கேலுக்கும் இந்தியாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கமான தொடர்புள்ளது.

இந்த பேரத்தில் அவருக்கு காங்கிரஸ் பின்புலமாக இருந்து உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மற்றொரு இடைத்தரகரான கியூடியோ ரல்ப் என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்மார்-எம்.ஜி.எப் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தார். இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் கனிஷ்காசிங் என்பவரால் நடத்தப்படுகிறது. இந்த கனிஷ்காசிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுக்கு நெருக்கமானவர்.

கனிஷ்காசிங்கும், கிறிஸ்டியன் மைக்கேலும் சேர்ந்து லஞ்ச பணத்தில் முதல் தவணனையாக ரூ. 210 கோடி பெற்றுள்ளனர். இந்தப் பணம் இந்தியாவில் எந்தக் குடும்பத்துக்குச் சென்றிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசுடனான இவர்கள் தொடர்புதான் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹெலிகாப்டர் பேர ஊழலுக்கும் ராகுல்காந்திக்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. பா.ஜ.க. முன்னாள் எம்.பி. கீர்த்தி சோமையா இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ஹெலிகாப்டர் பேர ஊழலுக்கும், ராகுல்காந்தியின் அரசியல் உதவியாளர் கனிஷ்கா சிங்குக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இத்தாலி பத்திரிகை உறுதிபட செய்தி வெளியிட்டுள்ளது.

ராகுல்காந்தி உதவி செய்ததன் மூலம் ரூ. 360 கோடி ஊழலில் கனிஷ்காசிங்கின் உறவினர்கள் லாபம் அடைந் திருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. எனவே இதில் மறைந்து இருக்கும் எல்லா ரகசியங்களையும் சி.பி.ஐ. தீவிரமாக விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...