அத்வானி தலைமையில் பாஜக தலைவர்கள் அடங்கியகுழு ஒன்று ஜனாதிபதி மாளிகைக்குசென்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசியது.
இந்த சந்திப்புக்கு பின் அத்வானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாட்டில் தற்போதுநிலவும் பொருளாதார சிக்கலால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமாக எடுத்துக் கூறினோம். இந்தபொருளாதார சிக்கலை சமாளிக்கும் திறமை இந்த அரசுக்குகிடையாது. ஐ.மு., கூட்டணி அரசின்பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்படவேண்டும் என்றும், தேசத்தின் நலன்கருதி புதிய அரசை தேர்ந்து எடுக்க மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் 5மாநில சட்ட சபைகளுக்கு நடைபெறும் தேர்தலுடன் சேர்த்து பாராளுமன்றத்துக்கும் தேர்தல்நடத்தலாம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக பிறர்மீது குற்றம் சாட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை மோசமானதற்கு முந்தைய நிதிமந்திரிதான் காரணம் என்று தற்போதைய நிதிமந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டி இருக்கிறார். முன்பு நிதிமந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜியை மனதில்கொண்டுதான் அவர் இவ்வாறு கூறி உள்ளார்.
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல்நடத்துமாறு ஜனாதிபதி கூறினாலும் அதை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளாது என்பது பாஜக.,க்கு தெரியும். என்றாலும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டால் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் அந்தகோரிக்கை வலுப்பெறும் என்று அத்வானி கூறினார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.