அகமதாபாத் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 3 வது இடத்தில் உள்ளது -.ஃபோர்ப்ஸ்

• • • ► குஜராத்தின் பாவ்நகர் அருகே , அலங்கில் உலகின் மிக பெரிய கப்பல் உடைத்து, மறுசுழற்சி செய்யும் தளம் உள்ளது.

• • • ► , குஜராத் தலைநகர் காந்திநகர் ஆசியாவிலேயே பசுமையான தலைநகரம் ஆகும் . இங்கு மொத்தம் 32,00,000 மரங்கள் . ஒரு நபருக்கு 22 மரம் என்ற விகிதம் உள்ளது . காந்திநகர் முழு ஆசியாவில் பசுமையான தலைநகரம் ஆகும் .

• • ► 2010ஆம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி , அகமதாபாத்தில்12 மணி நேரத்தில் , பொதுமக்களின் பங்களிப்புடன் ஒரு நாளில் 7.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டப்பட்டது., பாகிஸ்தான் முழுவதும் ஒரு நாளில் 5.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்து , ஒரு உலக சாதனையை படைத்தனர்.

• • • ► 2010 ஜனவரியில் அகமதாபாத் பேருந்து விரைவு போக்குவரத்து முறைக்கு(BRTS) ,போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனத்தால் உலகின் சிறந்த “நிலையான போக்குவரத்து அமைப்பு “என்ற விருது வழங்கப்பட்டது .

• • • ► குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள மதபர் என்ற கிராமம், ஆசியாவின் பணக்கார கிராமம் ஆகும் .

2009 இல் 15,000 மக்கள் தொகைகொண்ட அந்த கிராமத்தில் சராசரி தனிநபர் நிலையான வங்கி வைப்புத்தொகை (fixed deposit) 1,200,000 பவுண்டுகள் ஆகும்

• • • ► குஜராத் எரிவாயு, அடிப்படையிலான வெப்ப மின்சார உற்பத்தியில் தேசிய அளவில் முதல் இடத்திலும் அணு மின்சாரம் உற்பத்தியில் தேசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. .

• • • ► குஜராத் இந்தியாவிலேயே அதிகம் பால் உற்பத்தி செய்யும் மாநிலமாகும் .
அமுல் – ஆனந்த் பால் கூட்டுறவு கூட்டமைப்பு தயாரிப்புகள் இந்தியா முழுவதும் அறியப்பட்ட , மற்றும் ஆசியாவின் மிக பெரிய பால் பண்ணை ஆகும்

• • • ► குஜராத் Pavagadh ஹில்ஸ் அருகே Champaner_Pavagadh Archealogical பார்க்கை யுனெஸ்கோ ” உலக பாரம்பரிய களம் ” .என அங்கீகரித்துள்ளது

• • • ► உலகில் உள்ள வைரத்தில் 80 சதவிகிதம் குஜராத் சூரத் நகரில் உருவாக்கப்பட்டதாகும்.

• • ► குஜராத் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் செயல்படும் விமான நிலையங்கள் கொண்ட மாநிலம் ஆகும் ( மொத்த 12 ) .

• • • ► குஜராத் அதிக எரிவாயு கிரிட் கொண்ட மாநிலம் ( 2,200 கிமீ மாநிலம்) .
மாநிலத்தில் மொத்த சாலைகளில் 87,9 % நிலக்கீல் மேல்தளம்(asphalt surfaced) கொண்ட சாலைகள் ஆகும்.மேலும் 98,86 % கிராமங்கள் அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற சாலைகளால் இணைக்கப்பட்டுல்லன இது இந்தியாவிலேயே மிக அதிகம்.

• • • ► குஜராத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக அகமதாபாத் மற்றும் வதோதரா நகரங்களுக்கிடையே எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டுள்ளது.

• • ► குஜராத்தில் உள்ள நீண்ட நர்மதா கால்வாய்யின் மொத்த நீளமான 19,000 கிமீ நீளத்தில் 10 சதவீதம் கால்வாய் மேல் சூரிய பேனல்கள் பொருத்தப் பட்டாலே அது 2,200 மெகாவாட் சூரிய சக்தி உற்பத்தி திறன் கொண்டது, மேலும் 11,000 ஏக்கர் நிலத்தை சேமிக்க முடியும், மேலும் வருடம்தோறும் 2000 கோடி லிட்டர் நீரை ஆவியாகாமல் தடுக்க முடியும் .

• • • ► குஜராத்தில் உள்ள சூரத் நகரம் சண்டிகர் மற்றும் மைசூருக்கு அடுத்து இந்தியாவில் மூன்றாவது சுத்தமான நகரம் ஆகும்.

• • • ► குஜராத் அரசு காலநிலை மாற்றம் பற்றிய ஒரு தனி துறை அமைத்துள்ளது . இது ஆசியாவில் முதல் மாநில அரசு ஆகும் மேலும் உலகின் நான்கு மாநிலம் / மாகாணத்தில் மட்டுமே இது போன்ற துறை உள்ளது .

• • • ► அகமதாபாத் ஜவுளி துறையில் அதன் செழிப்பின் காரணமாக ‘ கிழக்கு மான்செஸ்டர் ‘ என்ற பெயரை பெற்று உள்ளது

• • • ► டாடா மோட்டார் நிறுவனத்தின் , உலகின் மிக மலிவான நானோ கார், குஜராத்தில் சனந்த் நகரில் உற்பத்தி செய்யப்படுகிறது .

• • • ► வேலைநிறுத்தம் காரணமாக இழந்த வேலை நாட்களின் சதவிகிதம் 0.42 ஆகும் ஆகும். இது இந்தியாவிலேயே மிகவும் குறைந்த அளவாகும்.

• • • ► அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூடொப் மேனேஜ்மென்ட் , ( IIMA ) ஆசியாவின் முதலாவது மற்றும், உலகின் தர வரிசையில் 45 வது இடத்தில் உள்ளது .

• • • ► குஜராத் மிகப்பெரிய(50,000 கிமீ க்கும் அதிகமான) OFC நெட்வொர்க்கை பெற்றுள்ளது.

• • • ► குஜராத்துக்கு சொந்தமான வைடு ஏரியா நெட்வொர்க் 12,000 இணைப்புகள் மூலம் 26 மாவட்டங்களில் மற்றும் 225 வட்டங்களை இணைக்கிரது ,இந்த ஐபி அடிப்படையிலான தகவல் நெட்வொர்க் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரியதும் மற்றும் உலகின் இரண்டாவது மிக பெரியதும் ஆகும்.

• • • ► குஜராத் இந்தியாவின் சோடா சாம்பல் தேவையில் 98% உற்பத்தி செய்கிறது மேலும் தேசிய உப்பு தேவையில் 78 % உற்பத்தி செய்கிறது.

• • • ► உலகின் மூன்றாவது பெரிய துணி உற்பத்தியாளராக அகமதாபாதின் அர்விந்த் மில்ஸ் உள்ளது .

• • • • ► குஜராத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , நாட்டின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 3.2 மடங்கு அதிகமக கொண்டு , நாட்டின் மிக வளமான மாநிலமாக உள்ளது

• • ► குஜராத் Dahej இல் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் , பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான அன்னிய நேரடி முதலீட்டில் முதல் 25 இடங்களுக்கான பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகும்.

• • • ► அகமதாபாத் ரியல் எஸ்டேட் துறையில் இரண்டாவது இடத்தில் உள்ளது .

• • • ► குஜராத் இந்தியாவில் மிக அதிக கண் தான விகிதம் கொண்டுள்ளது உள்ளது. குஜராத், நாட்டின் மொத்த கண் நன்கோடைகளில் 25 % பங்களிக்கிறது .

• • ► குஜராத்தில் ஒவ்வொரு நிமிடமும் , சராசரியாக ஒரு நபர் , இரத்த தானம் செய்கிறார்.

• • • ► குஜராத் இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் ஆகும் , அங்கு குற்ற விகிதம் 8.2 ஆகும் , இது இந்தியாவிலேயே குறைந்த அளவு.

• • • ► அனைத்து இந்திய மாநிலங்களில் ( கோவா நீங்கலாக ) பெண்களுக்கு எதிரன குற்றங்கல் குஜராத்தில் குறைந்த அளவாக உள்ளது .

• • • ► அகமதாபாத் இது ( NCRB ) அறிக்கை படி, குற்ற விகிதம் மிக குறைந்த அளவு உள்ள, ஏழாவது மிக பெரிய இந்திய நகரம் ஆகும்.

• • • ► குஜராத் இந்திய தொல்பொருள் ஆய்வு கணக்கெடுப்பு படி நாட்டில் துல்லியமாக பாதுகாக்கப்பட்ட மசூதிகள் அதிகம் இருக்கும் மாநிலம் ஆகும்.

• • • ► 2000 க்கும் மேற்பட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன எனவே குஜராத் ‘ கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் நிலம் ‘ என அழைக்கப்படுகிறது .

• • • ►இது ஒரு தனி நாடாக இருந்திருந்தால், அது சீனா மற்றும் உக்ரைன் போன்ற பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு மேலே உலகின் 67 ஆவது பணக்கார நாடாக இருந்திருக்கும் .

குஜராத் பொருளாதார வளர்ச்சியில் பல சாதனைகளை புரிந்துள்ளது :
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் 20 % .
இந்தியாவின் கனிம உற்பத்தி 9 % .
இந்தியாவின் ஏற்றுமதி 22 % .
இந்திய ஜவுளி உற்பத்தி 24 % .
இந்திய மருந்து பொருட்கள் 35 % .
இந்தியாவின் பெட்ரோலிய உற்பத்தி 51 %

இந்திய பங்கு சந்தையின் 35 % குஜராத்தி மக்களிடம் உள்ளது .

இந்தியாவின் மொத்த முதலீட்டில் 16 சதவிகிதம் குஜராத்தில் இருந்து வருகிறது.

குஜராத் முதல்வர் திரு நரேந்திர மடிக்கு நன்றி ,

இந்த உண்மைகள் பல்வேறு அரசு வலைத்தளங்களில் இருந்து மற்றும் துடிப்பான குஜராத் உச்சி மாநாடு 2011 ஒரு சிற்றேடு ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த கட்டுரை எழுதன் நோக்கம்:

நான் ஸ்ரீ நரேந்திர மொடிஜியின் தலைமையின் கீழ் குஜரத்தின் மகத்தான வளர்ச்சியை பற்றி பெருமிதம் கொள்கிறேன். குஜராத் கடந்த 11 ஆண்டுகளில் ஒரு வேகமான வளர்ச்சி கண்டிருக்கிறது. 2000-2001 ஆண்டில் முழு மாநிலத்தையே புரட்டி போட்ட பெரிய பூகம்பம்த்திட்கு பின்னர், மிகவும் கடினமான காலகட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட அவர் அங்கு கடந்த 11 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் எட்டாத உயரத்துக்கு குஜராத்தை கொண்டு சென்றுள்ளார்.
ஸ்ரீ மோடிஜி அவர்களை man of action என்று மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அவர் தன வாழ்வின் எல்லா நேரங்களையும் பதிக்கப்பட்ட மனிதர்களுக்காக அற்பநித்துக்கொண்டார். அவர் நிர்வாகத்தின் எந்த ஒரு மூலையிலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல் பார்த்துக்கொண்டார், இது ஏன் மொத்த இந்தியாவுக்கும் சாத்தியமாகக்கூடாது?

 

நன்றி தமிழில் ; தாமரை கண்ணன்

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...