வல்லபாய்பட்டேல் சிலை திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி ஜெய்ராம் ரமேஷ்க்கு மோடி கடிதம்

 அரசியல்ரீதியாக தன்னை கடுமையாக விமர்சித்துவரும் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷை குஜராத்தில் நடைபெறும் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலை திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார்சரோவர் அணையின் அருகே நர்மதா ஆற்றின் நடுவில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார்வல்லபாய் பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையைவிட இருமடங்கு உயரத்துடன் உலகின் அடையாள சின்னங்களின் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்தசிலையின் திறப்புவிழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

ஒருமைப்பாட்டு சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்தசிலையின் திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷுக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

‘என் அன்பிற்குரிய ஜெய்ராம் அவர்களே!

எக்தா அறக்கட்டளை எனும் அமைப்பால் நிறுவப்பட்டுள்ள சர்தார்வல்லபாய் பட்டேலின் இந்த பிரமாண்ட சிலை திறப்புவிழா நமது நாட்டின் சமூக, கலாசாரத்தை பிரதிபலிக்கும் சின்னமாக திகழும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த சிலையின் திறப்புவிழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கவேண்டும். தாங்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்’ என அந்த கடிதத்தில் மோடி எழுதியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...