இந்தியாவால் பயங்கரவாதம் குறித்தோ, பாதுகாப்பு குறித்தோ அலட்சியம் காட்ட முடியாது

 பாட்னாவில் கடந்த அக்டோபர் 27,2013 அன்று பாரதிய ஜனதா கட்சி "ஹுங்கார்" என்ற மிகப் பெரிய பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இந்தப் பொதுக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு ராஜ்நாத் சிங் குஜராத் மாநில முதலமைச்சரும் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமதமர் பதவிக்கான வேட்பாளருமான திரு. நரேந்திர மோடி ஆகியோரும் நானும் உரையாற்றினோம். மேலும் பீகார் மாநில

பாரதிய ஜனதாவின் பல்வேறு தலைவர்களும் உரையாற்றினார்கள். அந்தப் பொதுக்கூட்டத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது. பீகார் மாநில சட்ட சபைத் தேர்தலில் அடுத்தாண்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றியை உறுதி செய்யும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்தப் பொதுக்கூட்டம் அமைந்தது. வரலாற்று பெருமை வாய்ந்த காந்தி மைதானத்தில் பாட்னா நகர் இதுவரைக் கண்டிராத வகையில் பெருந்திரளான பொதுமக்கள் அளவுகடந்த ஆர்வத்துடன் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்தியிலும் பாட்னாவிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு பீஹார் மாநில மக்களுக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தின் மகத்தான வெற்றி உத்வேகம் அளித்துள்ளது.

பொதுக்கூட்ட மைதானத்தில் அதன் வெளிப்பகுதியிலும் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறப்படும் வெடிகுண்டு தாக்குதல் பெரும் கவலை அளிக்கிறது. இந்த சதித் திட்டமும் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. இதில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பாரதிய ஜனதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏற்பாடு செய்யப்படும் அரசியல் நிகழ்ச்சிகள், மற்றும் மூத்த தலைவர்களின் பாதுகாப்பு குறித்து இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உளவுத் துறை எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என பிஹார் மாநில முதலமைச்சரும் காவல் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இந்தக் கூற்றில் உண்மை இருப்பதாகத் தோன்றவில்லை. பல்வேறு நகரங்களில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பீஹார் உள்ளிட்ட மாநிலங்களின் காவல் துறை தலைமை இயக்குநருக்கு உளவுத் துறை பொதுவான எச்சரிக்கை விடுத்து உஷார் படுத்தியிருந்தது. பாட்னாவில் திரு. நரேந்திர மோடி உரையாற்றும் பொதுக்கூட்டத்தைக் குறிப்பிட்டு பிஹார் மாநில காவல்துறைக்கு மத்திய உளவுத் துறை கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த எச்சரிக்கை கடித எண் v-111/PA/2013 (3). திரு நரேந்திர மோடியின் பாட்னா வருகையின்போது தாக்குதல் நடத்த இந்திய முஜாஹிதீன்      திட்டமிட்டுள்ளதைத் தெரிந்துகொள்ள இந்த எச்சரிக்கை கடிதமே போதுமானது. வேறொரு இடத்திலிருந்து கிடைத்த தகவலின் ஆதாரத்தில் பத்கலை கைது செய்தது அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்று காலையில், பொதுக்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பாட்னா ரயில் நிலைய கழிவறையில் குண்டு வெடித்த தகவல் ஒளிபரப்பானது. இடம், நேரம் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், இதை ஒரு சாதாரண நிகழ்வு என்று அலட்சியப்படுத்தி இருக்கக்கூடாது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஏராளமானோர் ரயில்களின் மூலம் வந்து கொண்டிருந்தனர். ஒட்டுமொத்த நகரிலும் பீதியைக் கிளப்பும் நோக்கத்திலேயே ரயில் நிலையத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் மேடையின் பின்பக்கத்தை பகல் 12.10 மணிக்கு நான் அடைந்தேன். ஏராளமான போலீசாரும் ஊர்க்காவல் படையினரும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தாலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது பாதுகாப்பாக இருக்காது என குஜராத் போலீசின் இரண்டு அதிகாரிகள் என்னைத் தனியே அழைத்து கூறினர். வேறொரு மாநில முதல்வர் வருகை தரும்போது தேவைப்படும் ஏ.எஸ்.எல். பாதுகாப்பு ஏற்பாடு போதுமான அளவில் செய்யப்படவில்லை என்று இவர்கள் மேலும் கூறினர். சதி திட்டத்தை முறியடிப்பதற்கான சோதனையோ அல்லது முழு சீருடை ஒத்திகையோ போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களை பல்வேறு நுழைவாயில்களில் அவர்களின் உடல்களைத் தடவி முறையாக சோதனை நடத்தப்படவில்லை என்றும் அந்த இரண்டு அதிகாரிகள் கூறினார்கள். அது மட்டுமில்லாமல் ஏற்கெனவே பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் உள்ளேயும் குண்டு வெடிப்பு நடந்திருப்பதால், குஜராத் முதல்வர் விமான நிலையத்திலிருந்து கிளம்பி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்திற்கு வருவது பாதுகாப்பானதாக இருக்காது என்றும் கூறினர்.

இதற்கிடையே, பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங்கும் வந்துவிட்டார். இதைப் பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கையிலேயே மற்றொரு பெரிய குண்டு வெடிப்பு பொதுக்கூட்ட மைதானத்துக்குள் நிகழ்ந்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடம் நோக்கி சிதறி ஓடினர். சிலர் மைதானத்திலிருந்தே ஓடிவிட்டனர். நான் பிஹார் போலீசாரிடம் இந்தப் பிரச்சினை குறித்து அங்கிருந்த பிஹார் காவல் துறையின் மூத்த அதிகாரிகளுடன் பேசி அவர்களுடைய ஆலோசனையைப் பெற விரும்புவதாக கேட்டுக்கொண்டேன். என்னுடன் இது குறித்துப் பேச ஒரு இளம் பெண் போலீஸ் அதிகாரி வந்தார். இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்துவது பாதுகாப்பானதா இல்லையா என்று நான் அவரிடம் கேட்டேன். பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பாக, திரு நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவில்லை என்றால் ஆர்வத்துடன் திரண்டிருந்த மக்கள் கூட்டம் மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு வருவார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சிலர் பீதி அடைந்து இதன் காரணமாக தள்ளுமுள்ளும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு பலர் உயிரிழக்க நேரிடும் என நான் கவலைப்பட்டேன். அந்த காவல்துறை பெண் அதிகாரியிடம் மக்கள் கூட்டத்தை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு ஏதாவது திட்டம் உள்ளதா என கேட்டேன், அவரோ தனது மூத்த அதிகாரியான எஸ்.எஸ்.பி.யிடம் பேச வேண்டும் என கூறினார். இதனால் அடுத்து என்ன செய்வது என்பதை நாங்களே முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொதுக்கூட்டத்தை ரத்து செய்தால், அது பயங்கரவாதிகளை ஊக்கப்படுத்துவதாக அமைந்து அதன் விளைவாக ஒரு கலவரமோ கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசலோ நிச்சயமாக ஏற்படும் என அஞ்சினோம். எனவே, மேடைக்குச் சென்று பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று துணிச்சலாக முடிவெடுத்தோம். மேலும் ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால் பொதுக்கூட்ட நேரத்தை குறைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தோம். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் தலைவர்கள வெளியேறிச் செல்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளைத் தொடங்கினர். பீதி பரவாமல் தடுப்பதற்காக பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர் ஒருவர் பட்டாசுகள் எதையும் வெடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, மக்கள் கூட்டத்திற்கு தைரியமும் நம்பிக்கையும் அளித்தார். மேடையிலிருந்து நாங்கள் கீழே இறங்கியபோது, ஏற்கெனவே பொதுக்கூட்ட மைதானத்தைவிட்டு வெளியேறிச் சென்ற சிலர் மீண்டும் மைதானத்திற்குள் திரண்டு வந்தனர்.

நாங்கள் மீண்டும் மேடையேறி ஏராளமான மக்களிடையே உரையாற்றினோம். அதிர்ஷ்டவசமாக மேலும் எந்த வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்படவில்லை. ஆனால், சில வெடிபொருள்கள், வெடிக்காத நிலையில் அங்கு கிடந்தன. ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டதால் மற்ற சதிகாரர்கள் தப்பி ஓடியிருப்பார்கள் எனவும் இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாகவும் குஜராத் மாநில காவல் துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

இந்தியா பயங்கரவாதம் குறித்தோ அல்லது பாதுகாப்பு குறித்தோ அலட்சியம் காட்ட முடியாது என்பதை வலியுறுத்துவதற்காகவே இவ்வளவு விரிவாக என்  அனுபவத்தை நான் விளக்கியுள்ளேன். ஆட்சிப்பொறுப்பு வகிக்கும் அரசின் வாக்கு வங்கி கொள்கையுடன் பயங்கரவாதத்தை தடுப்புக் கொள்கையை மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை தொடர்புபடுத்தக்கூடாது. மத்திய உளவுத் துறையும் பாதுகாப்பு அமைப்புகளும் யாசின் பத்கலை கைது செய்தவுடன் வெளிப்படையான அரசியல் காரணங்களுக்காவோ அல்லது தயக்கம் காரணமாகவோ அவனை தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள பிஹார் போலீஸ் முன்வரவில்லை. அவனை தங்கள் பாதுகாப்பில் அழைத்துச் செல்ல ரக்சோலுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வரவேண்டியிருந்தது என்று ஊடகங்களில் செய்தி வெளிவந்தன. விசாணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சிலர் விசாரணை வளையத்திற்குள் சிக்குவதில்லை என்பது தில்லியில் ஒரு அதிகாரி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது.

விசாரணை வளையத்திற்குள் தப்பிய சிலர் இந்த வெடிகுண்டு தாக்குதல் சதிக்கு திட்டமிட்டுள்ளனரா? நரேந்திர மோடி உரையாற்றிய பல்வேறு பொதுக்கூட்டங்களில் மக்கள் கூட்டத்தினரை உடல்களைத் தடவி சோதனை செய்வது கட்டாயமாகப் பின்பற்றப்பட்டது. வெடிபொருள்கள், டெட்டோனர்கள் டைமர் சாதனங்கள் ஆகியவை பொதுக்கூட்ட மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்டது, கட்டாய சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது. பிஹாராக இருந்தாலும் வேறு எங்காவது இருந்தாலும் பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும் எந்திர சாதனங்களையும் அவர்களின் ஆபத்தான நடவடிக்கைகளையும் எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பத் திறமை மாநிலக் காவல் துறையிடம் உள்ளதா? இந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பாதுகாப்பு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கூறுவதுடன் பீகார் மாநில அரசு அதன் கடமையை நிறைவேற்றிவிட்டதாக திருப்தி அடைந்துவிட முடியாது. உண்மை நிலவரம் வேறுவிதமாக உள்ளது. இந்த அளவுக்கு ஏராளமான வெடிபொருட்களுடன் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள நிலவரம் போதுமான அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பீகார் மாநில பாரதிய ஜனதா தலைவர்களையும், ஒரு மிகப் பெரிய விபத்து நிகழ்ந்ததையும் பொருட்படுத்தாமல் அபாரத் துணிச்சலுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த லட்சக்கணக்கான மக்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த மக்கள் பீதியில் சிக்கியிருந்தார்களானால், அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானவையாக இருந்திருக்கும்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் திரு நரேந்திர மோடி மீதும் பாரதிய ஜனதாவின் பிற மூத்த தலைவர்கள் மீதும் நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். இந்த தாக்குதல் போக்குகளை முறியடிக்க சபதமேற்று தீவிர உறுதியுடன் செயல்பட்டு வரும் எங்கள் கட்சியை அச்சுறுத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்கதல் இது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் திரு. நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசும் உள்துறை  அமைச்சகமும் தீவிரமாக ஆய்வு செய்து எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவம் ஏதும் நடைபெறாது என்பதை உறுதிபடுத்த வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளில் இமாலய தோல்விக்குக் காரணமான குளறுபடிகள், கவனக்குறைவுகள் ஆகியன குறித்து உயர் மட்ட அளவில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கோருகிறது.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...