இந்தியாவின் பிரிவினைக்கு அனுமதி தந்து நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியது காங்கிரஸ் தான்,

இந்தியாவின் பிரிவினைக்கு அனுமதி தந்து நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியது காங்கிரஸ் தான், இந்தியாவின் பிரிவினைக்கு அனுமதி தந்து நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியது, நாட்டுக்காக பாடுபட்ட முக்கிய தலைவர்களை புறக்கணித்து, நேருகுடும்பத்தினரின் புகழ்பாடி வரலாற்றை மாற்றியது காங்கிரஸ் தான் என நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில தேர்தல்பிரசாரத்தின் போது பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவின் வரலாறு புவியியலை பா.ஜ.க மாற்றி விட்டதாக குற்றம் சுமத்தியிருந்தார் . இதற்கு பதில் தரும் வகையில் குஜராத் மாநிலம் கேடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நரேந்திரமோடி,

பிரதமர் மன்மோகன்சிங், ஹிந்துஸ்தான் மண்ணில் பிறந்தார். அது தற்போது நம்மிடம் இல்லை. இந்தியாவின் புவியியல் அமைப்பையே மாற்றியது காங்கிரஸ் தான்-

நம்நாட்டின் புவியியலை மாற்றியது யார்? நாட்டைப்பல துண்டுகளாகப் பிரிக்க யார்காரணம்? இந்தியாவை இரண்டாக பிரித்தது காங்கிரஸ் கட்சிதான். நம்நாட்டுக்கு சொந்தமான பல 100 சதுர கிமீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் இந்த புவியியல்மாற்றத்துக்கு யார்காரணம்? மகாத்மாகாந்தி உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்திய சபர்மதி-தண்டி பாதையை மாற்றியமைக்க முடிவுசெய்துள்ளது. 6 மாதங்களுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த பாதை 30 கிமீ. தூரத்திற்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் காங்கிரஸ்கட்சி மகாத்மா காந்தியைக் கைவிட்டுள்ளது.

சர்தார்படேலுக்கு 41 ஆண்டுகள் கழித்து பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. சட்டமேதை அம்பேத்கருக்கு நாடு சுதந்திரம்பெற்று 33 ஆண்டுகள் கழித்து இவ்விருது வழங்கப்பட்டது. ஆனால் நேருவுக்கும், இந்திராகாந்திக்கும் அவர்களது வாழ்நாளிலேயே பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.

லாலாலஜபதி ராய், பாலகங்காதர திலகர், பிபின்சந்திர பால் ஆகியோர் காங்கிரசால் மறக்கடிக்கப்பட்ட தலைவர்கள். நவம்பர் 11ந் தேதி மிகச்சிறந்த கல்வியாளர் அபுல்கலாம் ஆசாத், சுதந்திர போராட்ட வீரர் ஜேபி.கிருபளானி ஆகியோரின் 125வது பிறந்த தினமாகும். இதை காங்கிரஸ் அரசு கொண்டாடவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...